பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 மூவர் தேவாரம் - புதிய பார்வை அடிகளின் அமைப்பினை இரண்டாமடியின் முற்பாதியாகவும், முதலடியின் முற்பாதியாகவுள்ள தொடரையே இரண்டாம் அடியின் பிற்பாதியாகவும் பெற்றன. சிறுவர்களும் எளிதில் பொரு ளுணர்ந்து இசையுடன் பாடி மகிழும் நிலையில் அமைந்திருத்தல் இப் பதிகத்தின் தனிச் சிறப்பாகும். எண்வகைப்பட்ட குணங் களையுடைய இறைவனது திருவடியினை வணங்காத தலைகள், தத்தமக்கு உரிய புலனுணர்வினைக் கொள்ளும் ஆற்றலை இழந்த ஐம்பொறிகள் போலச் சிறிதும் பயனில்லாதன என்பார். கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத தலை (9) என்பது பொய்யா மொழி. காணாத கண் கேளாத செவி முதலியன போல இறைவனை வணங்காத் தலைகளும் பயனில என்பதாம். இவ்வாறு சிறப்புடைய அங்கமாகிய தலைமேல் வைத்துக் கூறினாரேனும், உடலுறுப்புகள் என்ற இனம்பற்றி இறைவனை வாழ்த்தாத நா. அவனது பொருள்சேர் புகழ்களைக் கேளாத செவிகள், முதலிய ஏனைய அங்கங்களும் அவ்வாறே பயனில என்பதும் குறிப்பினால் கொள்ள வைத்தார். இக் குறிப்பினை நன்குணர்ந்த மக்கள் எல்லோரும் தம்முடைய தலை, கண், செவி, மூக்கு, வாய், நெஞ்சு, கைகள் யாக்கை, கால்கள் ஆகிய அங்கங்கள் யாவும் இறை வழிபாட்டில் எளிதில் ஈடுபட்டு இன்புறும் இயல்பினவாகத் திருந்திப் பொறிவாயில் ஐந்தவித் தான் அருளிய ஒழுக்க நெறியில் ஒழுகும் வண்ணம் திருநாவுக்கரச ரால் அருளிச் செய்யப்பெற்றது 'திரு அங்கமாலை என்னும் இத்திருப்பதிகமாகும். கடவுள் வழிபாட்டில் ஈடுபடுதற்கேற்ற தகுதி பெற்றமையால் திருத்தகவினவாக விளங்கும் தலை, கண் முதலிய அங்கங்களின் சிறப்பியல்பினை முதன்முதல் அடிவரை வரிசையாக விரித்துரைத்தல்பற்றி இப்பதிகம் திரு அங்கமாலை என்னும் பெயர் பெற்றது. அங்கம் - உறுப்பு: மாலை - இயல்பு. வரிசை,