பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 217 தேமாங்காய் தேமா புளிமா புளிமாங்காய் என வெண்டளை பிழையாது பன்னிரண்டெழுத்துகளாலாய நாற்சீரடியாக வருதல் இப்பதிகச் செய்யுளின் கட்டளையாகும். பாடலின் ஈற்றடி நேரிசை முதலாகத் தொடங்கியுள்ளது. 'ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே என ஒரெழுத்துக் குறைந்து பதினோரெழுத்துகளாலும், நிரை யசையாகத் தொடங்கின், 'இரண்டுகொ லாமவர் எய்தன தாமே! எனப் பன்னிரண்டெழுத்துகளாலும் வரும். இவண் குறித்த எழுத் தளவும் வெண்டளையும் பிழையாது நிற்க, மாச்சீர் விளச்சீர் காய்ச்சீர்கள் விரவி வருதல் இவ் யாப்பின் அமைப்பாகும். 16-ஆம் பதிகத்தின் மூன்றாம் அடியினை, மெய்யர்மெய்ந் நின்றவர்க் கல்லா தவர்க்கென்றும் (4.16:1) தேமாங்காய் கூவிளம் தேமா புளிமாங்காய் எனப் பிரித்திசைத்து வெண்டளை பிழையாமை கண்டு கொள்ளலாம். எத்தீ புகினும் எமக்கொரு தீதிலை தெத்தே யெனமுரன் றெம்முள் உழிதர்வர் முத்தீயனையதொர் மூவிலை வேல்பிடித் தத்தி நிறத்தார் அரநெறி யாரே (4.17:1) என்பது 17-ஆம் பதிகத்தின் முதற் பாடல். இதன் முதலடியில் எத்தீ புகினும் என்ற பாடத்திற்கு வேறாக எத்திசை புகினும் என்ற பாடம் சிலபதிப்புகளில் காணப் பெறுகின்றது. எத்திசை புகினும் என வரும் இருசீர்களும் கூவிளம் புளிமா என நின்று நிரையொன்றாசிரியத் தளையாய் வெண்டளை பிழைத்தலால் “எத்தீ புகினும் என்ற பாடமே இப்பதிகத்தின் யாப்பமைதிக்கு ஏற்புடைத்தென்பது நன்கு துணியப்படும்.