பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22O மூவர் தேவாரம் - புதிய பார்வை 21-ஆம் பதிகம் குறிஞ்சிப் பண்ணுக்கு உரியது. முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே (4.21:1) தானா தனான தனனா தனன தனதானா என வருதல் இதன் கட்டளையடியாகும். தானா “தனானா' 'தனனா தனன' தானன என்பன ஒத்த அளவினவாய் வருதல் பொருந்தும். முதல் திருமுறையில் குறிஞ்சி என்ற பண்ணுக்கு உரியனவாய் 97 முதல் 102 வரையுள்ள பதிகங்களை யொத்த யாப்பியல்புடையது இத்திருப்பதிகமாகும். திருநேரிசை இத்திருமுறையில் 22 முதல் 79 முடியவுள்ள பதிகங்கள். விளம், மா, மா விளம் மா மா என்ற அறுசீரடி யாப்பாக வரும். திருநேரிசைப் பதிகங்களாகும். திருவிருத்தம் 80. முதல் 113 வரையுள்ள பதிகங்கள் கட்டளைக் கலித்துறையாப்பாகிய திருவிருத்த பதிகங்கள். இவ்விருவகைத் திருப்பதிகங்களையும் கொல்லிப் பண்ணின் இருவேறு கட்டளை களாகக் கொள்வர். தந்தாத நேரிசையாங் கொல்லிக்கு நாட்டில் இரண்டு என திருமுறைகண்ட புராணம் குறிப்பிடுதலால் திரு நேரிசைப் பதிகங்களை நேரிசைக் கொல்லி என்றும், திரு விருத்தப் பதிகங்களை விருத்தக் கொல்லி என்றும் வழங்கும் வழக்குண்மை இனிது விளங்கும். இத்திருமுறையின் முதற்கண் கொல்லிப் பண்ணுக்குரியதாகக் குறிக்கப் பெற்ற கூற்றாயின. (4.1) என்ற திருப்பதிகம். வாகீசர் அருந்தமிழின் முத்தாய தமிழுக்கு