பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 221 ஒன்றொன்றா மொழி வித்து' என்றபடி தனியே ஒரு கட்டளை யாகக் கொள்ளப் பெற்றமையாலும் நேரிசையின் பின்னுள்ள திருவிருத்தப் பதிகங்களைத் திருமுறை கண்டபுராணம் குறிப் பிடாது விட்டமையாலும் நேரிசையாங் கொல்லிக்கு இரண்டு' என்னும் தொகையுள் நேரிசை ஒரு கட்டளையாகவும், திருவிருத்தம் ஒரு கட்டளையாகவும் அடங்கினமை உய்த்துணரப் பெறும். ஐந்தாம் திருமுறை திருக்குறுந்தொகை யாப்பமைந்த திருப்பதிகங்கள் நூறு கொண்டது ஐந்தாம் திருமுறையாகும். (ஒரு) மா, கூவிளம், கூவிளம் என வருதல் திருக் குறுந்தொகைச் செய்யுளின் கட்டளையடி என்பது முன்னர் விளக்கப் பெற்றதை நினைவு கூறலாம். 'குறுந் தொகைக்கு ஒர் கட்டளையா விரித்துரைத்தார்' என்பது திருமுறை கண்டபுராணம். ஆறாம் திருமுறை திருத்தொண்டகப் பதிகங்கள் அனைத்தும் ஒருமுறையாகத் தொகுக்கப் பெற்றது ஆறாந் திருமுறையாகும். இதன் கண் தொண்ணுற்றொன்பது திருப்பதிகங்கள் அடங்கியுள்ளன. காய்ச் சீரடி, நான்கினால் இயன்ற கொச்சகச் செய்யுளில் அடிதோறும் இரண்டாம் சீர்க்குப் பின்னும் நான்காம் சீர்க்குப் பின்னும் இரண்டிரண்டு மாச்சீர்களைப் பெற்று வரும் யாப்பு தாண்டகம் என்னும் பாவாகும் என்பது முன்னர் விளக்கப் பெற்றதை ஈண்டு நினைவு கூர்தல் பொருத்தமாகும். 'தாண்டகம் பாவுக்கோர் கட்டளையாத் தாபித்து எனத் திருமுறை கண்ட புராணம் குறிப் பிடுதலால் திருநாவுக்கரசர் அருளிய திருத்தாண்டகப் பதிகங்கள் யாவும் ஒரே கட்டளையாதல் இனிது விளங்கும்.