பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 மூவர் தேவாரம் - புதிய பார்வை ஏழாந் திருமுறை நம்பியாரூரர் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்கள் யாவும் ஏழாம் திருமுறை என ஒரே திருமுறையாக வகுக்கப் பெற்றுள்ளதை நாம் அறிவோம். இந்தளம் இத்திருமுறையில் 1 முதல் 12 வரை அமைந்த பதிகங்கள் இந்தளப் பண்ணுக்கு உரியன. இப் பதிகங்களில் ஒன்பது யாப்பு விகற்பங்கள் உள்ளன. யாப்பு - 1 பித்தா பிறைசூடி பெருமானே யருளளா (7.1:9) தானாதன தானாதன தானாதன தானா என வரும். இவ்வாறு வகையுளியாக்காது, பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா தானா தனதானா தனதானா தனதானா. எனப் பொருள் இனிது புலப்படப் பிரித்திசைத்தலும் ஏற்புடையதே யாகும். முதல் திருமுறையில் 9 முதல் 18 வரையுள்ள நட்ட பாடைப் பதிகங்களை அடியொற்றியமைந்தது இப்பதிகமாகும். யாப்பு - 2 கோத்திட்டை யுங்கோவ லுங்கோயில் கொண்டிர் உமைக்கொண்டு ழல்கிறை தோர்கொலைச் சில்லைச் (7.2:1) தானான தானான தானான தானா தானான தானான தானான தானா என எண் சீரடியாக வரும். இதனை,