பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 மூவர் தேவாரம் - புதிய பார்வை என வரும் (13-ஆம் பதிகம்). இத்திருப்பதிகப் பாடல்களின் இரண்டாம் அடிகளில் முதற் சீர்களாகிய 'குலையார'1 சுரும்பார' (3), மொட்டார (6), தாதார (7), செய்யார (8), மண்ணார' (9) என்பவற்றில் ஈற்று ரகரம் மெய்ந் நீர்மை பெறும் என்பர் யாழ் நூலார். யாப்பு - 2 வைத்தனன் றனக்கே தலையுமென் னாவும் நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி (7.14:1) கூவிளம் புளிமா கருவிளம் தேமா கூவிளம் கூவிளம் தேமா என எழுசீரடி பெற்றுவரும் (14-ஆம் பதிகம்). தானன தனனா தனதன தானா தானன தானன தானா என்பதனைக் கட்டளை யடியாகக் கொள்ளலாம். யாப்பு - 3 பூனா னாவதோ ராவங்கண் டஞ்சேன் புறங்காட் டாடல்கண் டிகழேன் (7.15:1) தேமாகூவிளம் கருவிளம் தேமா புளிமா கூவிளம் புளிமா என எழுசீராய் வரும் (15-ஆம் பதிகம்). இவ்வடியில் 'ரரவங்கண்' என்புழி ங்கர வொற்றும், 'டாடல்கண்' எனபுழி லகர வொற்றும் ஒலியடங்கி நிற்க, அவ்வொற்றின் முன்னும் பின்னும் நின்ற குறில்கள் இணைந்து நிரையசையாயின. ஆதலால் அச்சீர்கள் முறையே: கருவிளம் கூவிளம்' என ஓசையூட்டப் பெற்றன. தானா தானன தனதன தானா தனனா தானன தனனா என்பதனை இப்பதிகத்தின் கட்டளையடியாகக் கொள்ளலாம்.