பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 227 யாப்பு - 4 குரும்பைமுலை மலர்க்குழலி கொண்ட தவங்கண்டு குறிப்பினொடுஞ் சென்றவடன் குணத்தினைநன்கறிந்து (7.16:1) என எண்சீரடியாக வருவது 16ஆம் பதிகம். தனனதன தனதனன தானதன தானா தனனதன தானதன தனதனன தானா என்பதனை இதன் கட்டளையடியாகக் கொள்ளலாம். தனணதன 'தானதன. ஆதலும், தானா தனனா ஆதலும் பொருந்தும். 'நீண்ட தக்கராகத்துக்கு இரண்டாக நிகழ்வித்தார்' எனத் திருமுறை கண்டபுராணம் குறிப்பிடுதலால் கீழ்க்காட்டிய நான்கு யாப்பு விகற்பங்களையும் ஓசை யொற்றுமையையும் தாள அமைதியையும் நோக்கி முன்னுள்ளோர் இரண்டு கட்டளை யாக அடக்கினார்கள் என்பது புலனாம். நட்டராகம் 17 முதல் 30 வரையுள்ள பதிகங்கள் நட்டராகம்’ என்ற பண்ணுக்கு உரியன. 'கூறற்கரிய நட்ட ராகத்து இரண்டு என்பது திருமுறை கண்ட புராணத்துக் குறிப்பாதலின் இப்பதிகங்கள் இரண்டு கட்டளையுள் அடங்கும் எனத் தெரிகின்றது. 17 முதல் 29 வரையுள்ள பதிகங்கள் ஒரு கட்டளையாகக் கொள்ளத்தக்கன. 30-ஆம் பதிகம் மற்றொரு கட்டளையாகும். முதற் கட்டளைக் குரிய பதிகங்களில் இரண்டு யாப்பு விகற்பங்கள் உள்ளன. யாப்பு - 1 கோவலனான்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்ய (7.17:1) கூவிளம் கூவிளம் கூவிளம் தேமாங்காய் கூவிளங்காய்