பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 247 களாகிய யாப்பமைதியினைப் பகுத்து உணருங்கால் அதனை நிலைக்களனாகக் கொண்டு நிகழும் தாளக் கூறுபாடும் இனிது விளங்கும் என்னும் கருத்தால் திருமுறைகண்ட புராண ஆசிரியர் தேவாரத் திருப்பதிகங்களின் பண்முறை பற்றியமைந்த கட்டளை களைப் பகுத்துக் கூறியுள்ளார். திருமுறை கண்டபுராணத்தில் கூறிய வண்ணம் தேவாரப் பதிகங்களுக்குரிய பண்களும் கட்டளைகளும் பெரிய புராண ஆசிரியராகிய சேக்கிழார் பெருமான் காலத்திற்கு முன்பிருந்தே வழங்கி வந்துள்ளன. திருமுறைகண்டபுராணம் காலத்தாற் பிற்பட்டதாயினும் அந்நூல் விரித்துரைக்கும் திருமுறைப் பகுப்பும் பண்ணடைவும் கட்டளை வகைகளும் திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பி காலத்திலேயே நிலை பெற்று வழங்கிய தொன்மை வாய்ந்தன என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. ஆளுடைய பிள்ளையார் பாடிய ‘பூவார் கொன்றை (1.24) என்னும் திருப்பதிகம் தக்கராகப் பண்ணுக்குரிய கட்டளைகளுள் ஒரு கட்டளைக்குரிய எட்டுத் திருப்பதிகங்களுள் ஒன்றாக அமைந்தது என்பதனை, "திருப்பெருகு பெருங்கோயில் சூழவலங் கொண்டருளித் திருமுன் நின்றே அருட்பெருகு திருப்பதிகம் எட்டொருகட் டளையாக்கி அவற்றுள் ஒன்று விருப்புறுபொற் றிருத்தோணி வீற்றிருந்தார் தமைப்பாட வரவு காதல் பொருத்தமுற அருள்பெற்றுப் போற்றியெடுத் தருளினார் பூவார் கொன்றை.' என்ற பாடலில் சேக்கிழார் பெருமான் தெளிவாக விளக்கி யுள்ளார்கள். சம்பந்தர் அருளிய முதல் திருமுறையில் 'மடையில் வாளை (1.23) முதல் 'விதியாய் விளைவாய் (1.30) என்பது 37 பெரி.புரா - சம்பந்தர் புரா.107