பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 மூவர் தேவாரம் - புதிய பார்வை ஆதியன் ஆதிரையன் - அயன் - மாலறி தற்கரிய (7.971) தானன தானதனா - தன - தானன தானதனா என வருவது இதன் கட்டளையாகும், 97-100-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. இவை மூன்றாம் திருமுறையில் பஞ்சமம் என்ற பண்ணுக்கு உரிய 56-62-ஆம் பதிகங்களை அடியொற்றி அமைந்தனவாகும். முடிவுரை இதுகாறும் தேவார ஆசிரியர்கள் மூவரும் திருவாய் மலர்ந் தருளிய ஏழு திருமுறைகளிலும் முறையே அமைந்துள்ள பண்கள் இவை என்பதும், அப் பண்களுக்குரிய திருப்பதிகங்கள் பெற் றுள்ள கட்டளை விகற்பங்களின் தொகையும், அவை புலப்படும் நிலையில் இப்பொழுது தேவாரத் திருப்பதிகங்களில் தெளிவாக விளங்கும் யாப்பமைதிகளும் ஏடு எழுதுவோர்களால் பிற்காலத் தில் நேர்ந்த சில மாற்றங்களும் திருமுறை கண்டபுராணத்தை ஆதரவாகக் கொண்டு எடுத்துக் காட்டி விளக்கினேன். தேவாரத் திருப்பதிகங்களை இசையுடன் பாடியும் கேட்டும் மகிழ வேண்டுமானால் அப்பதிகங்களுக்குரிய பண்ணாகிய இசையமைப்பினையும் பாடல்களுக்கு உரிய தாள அமைப்பினை யும் நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். செய்யுட்களின் தாள அமைதியினைப் புலப்படுத்துவன அவற்றில் அமைந்த சீர்நிலைகளேயாகும். "சீர்' என்னும் சொல்லுக்குத் தாளம் என்பதும் ஒரு பொருள்." எனவே திருப்பதிகப் பாடல்களின் சீர்நிலை 36 கொடியுரை நுகப்பினாள் கொண்ட சீர் தருவாளோ? - கலித்தொகை கடவுள் வாழ்த்து.