பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 245 என்பது 96-ஆம் பதிகத்தின் கட்டளையாகும். தானானா தனதானா ஆதலும், தானன தனதன ஆதலும் அமையும். கவுசிகப்பாற். றுற்றவிசை இரண்டாக்கி' என்பதனால் இப்பண் ஆளுடைய பிள்ளையார் அருளிய கவுசிகப் பதிகங்களில் போன்று இங்கு இரண்டு கட்டளை பெறுமெனக் கருத வேண்டியுளது. மூன்றாம் திருமுறையிலும் ஏழாந்திருமுறையிலும் கவுசிகம் என்ற பண்ணமைந்த பதிகங்களின் பின் பஞ்சமம் என்னும் பண்ணுக்குரிய பதிகங்கள் முறைப்படுத்தப் பெற்றுள்ளன. இம் முறையில் கவுசிகப் பண்ணுக்குரிய இறுதிப் பதிகம் பஞ்சமத் திற்கு உரியதாகவும் பஞ்சமத்திற்குரிய முதற்பதிகம் கவுசிகத்திற்கு உரியதாகவும் ஏடுகளில் பண்பெயர்கள் இடம்மாறிக் குறிக்கப் பெறுதல் நிகழக் கூடியதேயாம். மூன்றாம் திருமுறையில் விரையார் கொன்றையினாய் (3.55) என்ற திருப்பதிகம் பஞ்சமம் என்ற பண்ணுக்குரிய இயலிசை அமைப்புடையதாகவும், முன்னுள்ள கவுசிகப் பதிகங்களுடன் சேர்த் தெண்ணப் பெற்றுள்ளது. அது போலவே, இவ் வேழாந்திருமுறையில் கவுசிகப் பண்ணுக்கு உரிய 'தூவாயா' (7.96) என்னும் பதிகம் பின்னுள்ள பஞ்சமம் என்ற பண்ணுக்குரிய பதிகங்களுடன் சேர்த்து எண்ணப் பெற் றிருத்தல் வேண்டும் எனத் தெரிகின்றது. பஞ்சமம் 97 முதல் 100 வரை உள்ள திருப்பதிகங்கள் பஞ்சமம் என்ற பண்ணில் அமைந்துள்ளன. தூய இசைப்பஞ்சமத்துக்கு அற்ற இசை ஒன்றாக்கி அரனருளால் விரித்துரைத்தார்' எனத் திருமுறை கண்ட புராண ஆசிரியர் தேவாரப் பண்ணின் கட்டளை வகை யினைக் கூறி முடித்துள்ளார். எனவே ஏழாந்திருமுறையின் இறுதிப் பண்ணாக அமைந்தது பஞ்சமம் என்பதும், அப்பண்ணுக்கு உரிய பதிகங்கள் ஒரே கட்டளையாய் அடங்கும் என்பதும் நன்கு புலனாகும்.