பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 மூவர் தேவாரம் - புதிய பார்வை எனத் திருமுறைகண்ட புராணம் குறிப்பிடுதலால் 95-ஆம் பதிகமாகிய 'மீளா அடிமை (7.95) என்னும் செந்துருத்திப் பதிகத்திற்கு முன்னுள்ள (7.94) என்ற பதிகம் குறிஞ்சிப் பண்ணுக்கு உரியதென்பதும், செந்துருத்திப் பதிகத்தின் பின்னுள்ள துவாயா (7.96) என்னும் பதிகம் கவுசிகப் பண்ணுக்கு உரியதென்பதும் நன்கு பெறப்படும். செந்துருத்தி என்ற பண்ணின் பழைய பெயர் செந்திறம்' என்பதாகும். செந்துருத்திக்கு ஒன்றாக்கி' என்றதனால் இஃது ஒரு கட்டளை பெறும் என்பது புலனாம். மீளா அடிமையுமக்கே யாளாய்ப் பிறரை வேண்டாதே (7.951) தானா தனனா தனனா தானா தனனா தானானா என வரும். தானா தனனா ஆதலும், தனனா தானா ஆதலும், தானானா தனதானா ஆதலும் அமையும். ஏழாந்திருமுறையில் (7.96) என்ற இப்பதிகம் முதல் திருமுறையில் 66 முதல் 74 வரையுள்ள தக்கேசிப் பதிகங்களின் யாப்பினை ஒத்திருத்தல் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கதாகும். (7.96) பதிகம் பஞ்சமம் என்ற பண்ணிற்கு உரியதாக அச்சிடப் பெற்ற பதிப்புகளில் குறிக்கப் பெற்றுள்ளது. சுந்தரர் பாடியருளிய திருப்பதிகங்களில் செந்துருத்தி என வழங்கும். செந்திறப் பண்ணிற்கும் பஞ்சமம் என்ற பண்ணிற்கும் இடையே கவுசிகம் என்ற பண் அமைந்ததாகத் திருமுறை கண்ட புராணம் குறிப்பிடுதலால், 'தூவாயா (7.96) என்ற பதிகத்தினைக் கவுசிகப் பண்ணிற்கு உரியதாகக் கொள்ள வுேண்டும் என்பது விபுலானந்த அடிகளார் (யாழ்நூலாசிரியர்) கருத்தாகும். துவாயா தொண்டுசெய் வார்படு துக்கங்கள் (7.96.1) தானானா தானனா தானன தானானா