பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 243 யாப்பு - 3 எற்றான் மறக்கே னெழுமைக்கு மெம்பெரு மானையே (7.92:1) தானா தனனா தனதான தானன தானனா என வரும் 92-ஆம் பதிகம் பலவாறு விகற்பித்து வரும் கட்டளை யடியினையுடையதாகும். 'இப்பதிகமானது 91, 93, 94 என்னும் எண் பெற்ற பதிகங் களோடு தாளம் ஒன்றப் பாடுதற்குரியது. அம்மூன்று பதிகமும் ஒரு கட்டளையாக, மடித்தாடு மடிமை (7,90) என்ற திருப்பதிகம் மற்றொரு கட்டளையாகக் குறிஞ்சி பண் இரண்டு கட்டளை பெற்றது என்பர் யாழ் நூலாசிரியர். இவண் குறித்த பதிகங்களுள் (7.94) எண் பெற்ற 'அழனி ரொழுகி யனைய சடையும் என்ற திருப்பதிகம் "கவுசிகம்' என்ற பண்ணுக்கு உரியதாக வெளிவந்த பதிப்புகளில் குறிக்கப் பெற்றுள்ளது. திருமுறை கண்ட புராணத்தில் சுந்தரர் அருளிய ஏழாந்திருமுறைப் பண்களை நிரல் படக் கூறுமிடத்துக் குறிஞ்சிப் பண்ணின் பின் செந்துருத்தியும் அதனையடுத்துக் கவுசிகப் பண்ணும் முறையே இடம் பெற்றிருத்தலாலும், குறிஞ்சிக்கும் செந்துருத்திக்கும் இடையேயுள்ள 'அழநீரொழுகி (7.94) என்னும் பதிகம் முன் குறிஞ்சிப் பண்ணுக்கு உரியனவாகக் குறித்த இரண்டு கட்டளைகளுள் ஒன்றெனத் தெளிவாகத் தெரித லாலும் அதனைக் கவுசிகம் என்ற பண்ணுக்குரியதாகக் கொள் வதைக் காட்டிலும் குறிஞ்சி எனக் கொள்ளுதலே ஏற்புடையதாகும். 'உற்றவிசைக் குறிஞ்சிக்கோ ரிரண்டாக வகுத்தமைத்து பற்றறிய செந்துருத்திக் கொன்றாகக் கவுசிகப்பாற் றுற்றவிசை யிரண்டாக்கி"