பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 மூவர் தேவாரம் - புதிய பார்வை யாப்பு - 1 மடித்தாடு மடிமைக்க ணன்றியே மனனேநீ வாழு நாளும் (7,901) புளிதமாங்காய் புளிமாங்காய் தேமாங்காய் புளிமாங்காய் தேமா தேமா எனக் காய்ச்சீர் நான்கும் மாச்சீர் இரண்டும் பெற்று அறுசீரடியாய் வரும். முதல் திருமுறையில் 129 முதல் 132 வரை உள்ள பதிகங் களையும் இவ் வேழாந்திருமுறையில் (7.30) எண்ணுடைய நட்டராகப் பதிகத்தினையும் அடியொற்றியது 90-ஆம் எண்ணுள்ள இப்பதிகமாகும். யாப்பு- 2 பாட்டுப் பாடிப் பரவித் திரிவார் (7.911) தானா தானா தனனா தனனா எனவும், - பந்துங் கிளியும் பயிலும் பாவை (7.912) தானா தனனா தனனா தானா எனவும் பத்தெழுத் தடிகளாகவும், என்ன தெழிலு நிறையுங் கவர்வாள (7.914) தானா தனனா தனனா தனனா எனவும், பனங்கொ ளரவம் பற்றிப் பரமன் (7.915) எனவும் பதினோரெழுத்தடிகளாகவும், முழுநீறணிமேனியின்மொய் குழலார் (7.93:5) தனனா தனனா தனனா தனனா எனப் பன்னிரண்டெழுத்தடிகளாகவும் வருதல் இதன் கட்டளை யமைப்பாகும். 91, 93, 94-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின.