பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 241 என வருவது. 84-ஆம் பதிகம் இவண் குறித்த கட்டளையினை இரட்டிக்க வரும் கட்டளையினையுடையதாகும். சீகாமரம் 86 முதல் 89 வரையுள்ள பதிகங்கள் சீகாமரப் பண்ணைச் சார்ந்தன. இப் பதிகங்களில் யாப்பு விகற்பங்கள் இரண்டுள்ளன. விடையின்மேல் வருவானை வேதத்தின் யொருளானை (7.86:1) புளிமாங்காய் புளிமாங்காய் தேமாங்காய் புளிமாங்காய் எனக் காய்ச்சீர் நான்கு கொண்ட அடியினால் இயன்ற தரவு கொச்சகக் கலிப்பாவாக அமைந்தவை. 86, 89-ஆம் பதிகங்கள். இவை இரண்டாம் திருமுறையில் 40 முதல் 48 வரையுள்ள சீகாமரப் பதிகங்களை ஒத்தமைந்தன. இரண்டாந் திருமுறையில் 49 முதல் 53 வரையுள்ள சீகாமரப் பதிகங்களையும், நாலாந் திருமுறையில் 29 -ஆம் எண் பெற்ற சீகாமரப் பதிகத்தினையும் ஒத்தமைந்திருத்தல் அறியத்தக்கதாகும். காமரத்துக்கு ஒன்றாகப் போற்றினார்' எனத் திருமுறை கண்ட புராணம் குறிப்பிடுதல் இவண் காட்டிய யாப்பு விகற்பங்கள் இரண்டும் ஒரே கட்டளை யாய் அடங்கும் என்பது புலனாம். குறிஞ்சி 90 முதல் 93 வரையுள்ள பதிகங்கள் குறிஞ்சிப் பண்ணைச் சார்ந்தன. உற்றவிசைக் குறிஞ்சிக்கு ஓர் இரண்டாக வகுத்தமைத்து எனத் திருமுறை கண்ட புராணம் குறிப்பிடுதலால் சுந்தரர் அருளிய குறிஞ்சிப் பதிகங்கள் இரண்டு கட்டளையுடையன என்பது பெறப்படும். இப்பதிகங்களில் உள்ள யாப்பு விகற்பங் கள் மூன்றாகும்.