பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24O மூவர் தேவாரம் - புதிய பார்வை சூழ்தரு வல்வினையும் - உடல்தோன்றிய பல்பிணியும் பாழ்பட வேண்டுதிரேல் - மிகஏத்துமின் பாய்புனலும் போழிள வெண்மதியும் - அனல் பொங்கர வும்புனைந்த தாழ்சடை யான்பனந்தாள் - திருத் தாடகை யீச்சரமே (3.62:4) என ஆளுடைய பிள்ளையார் அருளிய பஞ்சமத்திற்குரிய பதிகப்பாடலில் அடிதோறும் நடுவே பிரிந்து இசைக்கும். உடல்', 'மிக', 'அனல் 'திருத்' என்னும் தனியசைகளை விலக்கிப்படிக்க, சூழ்தரு வல்வினையும் தோன்றிய பல்பிணியும் பாழ்பட வேண்டுதிரேல் ஏத்துமின் பாய்புனலும் மோழிள வெண்மதியும் பொங்கர வும்புனைந்த தாழ்சடை யான்பனந்தாள் தாடகை யீச்சரமே (3.62:4) என்ற பாடலமைப்பு வந்தெய்தும். இவ் யாப்புருவம் புறநீர்மைப் பதிகமாகிய 'அந்தியும் நண்பகலும் (7.83) வடிவுடை மழுவேந்தி (7.85) என்ற பதிகங்களின் யாப்பிற்கு அடிப்படை யாக உள்ளமை ஆழ்ந்து உணரத்தக்கதாகும். 83, 85-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின. கட்டளை - 2 தொண்ட ரடித்தொழலும் சோதி இளம்பிறையும் சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும் (7.84:1) தான தனதனனா தான தனதனரா தானன தானதனா தானன தானதனா