பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 17 பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 239 கட்டளை - 2 கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே (7.81:1) தான தான தனன தானை தானனா என வருவது 81-ஆம் பதிகமாகும். புறநீர்மை 83 முதல் 85 வரையுள்ள பதிகங்கள் புறநீர்மை என்ற பண்ண மைந்தன. குன்றாத புறநீர்மைக்கு இரண்டாகக் கூறும் இசை ஒன்றாக என திருமுறை கண்ட புராணம் குறிப்பிடுதலால் இப் பதிகங்களில் இரண்டு கட்டளைகள் உள என்பதும், கட்டளைகள் இரண்டாயினும் இப்பதிகங்களை இசைக்கும் ஓசை முறை ஒன்றே என்பதும் நன்கு புலனாகும். கட்டளை - 1 அந்தியு நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி (7.83:1) தானன தானதனா தானன தானானா என வரும். முதற்சீரின் ஈற்றெழுத்து அடுத்த சீருடன் இயை வரும். 'தான தனதனனா தானனதானதனா என்னும் விகற்பமும், அவ்வாறே மூன்றாஞ்சீரின் ஈற்றெழுத்து நான்காஞ்சீரின் இயைய வரும். 'தான தனன தனா தான தனன தனா என்னும் விகற்பமும் இம்முதற் கட்டளையுள் அடங்கும். மூன்றாந் திருமுறையில் 56 முதல் 62 வரையுள்ள பஞ்சமம் என்ற பண்ணமைந்த பதிகங் களின் கட்டளையாகிய, தானன தானதனா - தன - தானன தானதனா என்பதில் நடுவே நின்ற தன. ஒரசையை நீக்கப் புறநீர்மைப் பதிகங்களுக்கு உரியதாக கீழ்க்காட்டிய கட்டளையடி வந்தெய்தும்.