பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 மூவர் தேவாரம் - புதிய பார்வை காந்தார பஞ்சமம் 77-ஆம் பதிகம் காந்தாரப் பஞ்சமம். 'ஒன்றாகும் காந்தாரப் பஞ்சமத்துக்கு' என்றமையால் இப்பண்ணமைந்த பதிகம் ஒரே கட்டளையினதாதல் பெறப்படும். பரவும் பரிசொன் றறியேனான் பண்டே யும்மைப் பயிலாதேன் (7.77.1) தனனா தனனா தனதானா தானா தானா தனதானா என அறுசீராய் வருவது இதன் கட்டளையடியாகும். ஒவ்வொரு பாடலின் ஈற்றிலும் வந்துள்ள அடிகளோ என்பதன் நடுவே யுள்ள ககரமாகிய குற்றெழுத்து 'அடிக-ளோ என விட்டிசைத்து நிற்க அச்சொல் புளிமாங்காய் எனக் காய்ச்சீர் ஆயிற்று. நட்டபாடை 78 முதல் 82 வரையுள்ள பதிகங்கள் நட்டபாடைப் பண்ணில் அமைந்தன. 'ஒர் இரண்டாம் நன்றான சீர் நட்டபாடைக்கு என்றமையால் இப்பதிகங்களில் அமைந்த கட்டளைகள் இரண்டு என்பது பெறப்படும். கட்டளை - 1 வாழ்வாவது மாயமிது மண்ணாவது திண்ணம் (7.78:1) தானாதன தானாதன தானாதன தானா எனவரும். தானாதன தனனாதன ஆதலும், தானா தனனா ஆதலும் அமையும். முதல் திருமுறையில் 11 முதல் 18 வரை யுள்ள நைவள (நட்டபாடை)ப் பதிகங்களையும் இத்திரு முறையில் முதலாவதாகவுள்ள பித்தா பிறைசூடி (7.1) என்னும் இந்தளப் பதிகத்தையும் அடியொற்றி அமைந்தது இக் கட்டளையடியாகும். 78-80, 82-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின.