பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 237 என வரும், 73, 75-ஆம் பதிகங்கள் ஒரே யாப்பின் பாற்படும். யாப்பு - 4 மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும் (7.74:1) தானனா தானன தனதன தானா தனதன தனதன தனதன தானா என எண்சீரடியாக வருதல் 74-ஆம் பதிகத்தின் கட்டளையடி யாகும். 'காந்தாரம் பிரிந்திரண்டாம் எனத் திருமுறைகண்ட புராணம் குறிப்பிடுதலால் காந்தாரப்பண் அமைந்த திருப்பதிகங் கள் காந்தாரமும், பியந்தைக் காந்தாரமும் என இரு திறப்பட்டு இரண்டு கட்டளை பெறுவன எனக் கொள்ளுதல் ஏற்புடைய தாகும். கீழே காட்டிய காந்தாரப் பதிகங்களில் 1, 2-ஆம் யாப்பு விகற்பங்கள் ஒரு கட்டளையாகவும் 3, 4-ஆம் விகற்பங்கள் மற்றொரு கட்டளையாகவும் கொள்ளத்தக்கன. பியந்தைக் காந்தாரம் 76-ஆம் பியந்தைக் காந்தாரமாகும். பொருவ னார்புரி நூலர் புணர்முலை யுமையவளோடு (7.76.1) தனன தானன தானா தனதன தனதன தானா என வரும். இரண்டாம் திருமுறையில் 90-ஆம் எண் பெற்ற 'எந்தை யீசனெம் பெருமான் (2.90) என்னும் பியந்தைக் காந்தாரப் பதிகத்தை ஒத்து இத்திருப்பதிகம் அமைந்திருத்தல் அறியத்தக்க தாகும்.