பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 மூவர் தேவாரம் - புதிய பார்வை தனன தானன தானன தனனா தனன தானன தானனா தானா என்றாங்கு மாச்சீரும் விளச்சீரும் விரவி எண்சீரடியாக வருதல் இத்திருப்பதிகங்களின் கட்டளையாகும். 'தனன தான ஆதலும், 'தானன தனதன ஆதலும், 'தனனா தானா ஆதலும், தானா தனனா ஆதலும் அமையும். 54 முதல் 70 வரை தக்கேசிப் பண்ணமைந்த திருப்பதிகங்கள் யாவும் ஒரே யாப்பினவாய் ஒரே கட்டளையில் அடங்குதலால் தக்கேசிப் பேரிசையர்றாக்கி' என வரும் திருமுறை கண்ட புராணத் தொடர், 'தக்கேசிப் பேரிசை யொன்றாக்கி' என்றிருத்தல் வேண்டும் என்பது யாழ் நூலாசிரி யர் கருத்தாகும். காந்தாரம் 71 முதல் 75 வரையுள்ள பதிகங்கள் காந்தாரப் பண்ணுக்கு உரியன. இவற்றில் அமைந்துள்ள யாப்பு வகைகள் நான்காகும். யாப்பு - 1 யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன் (7.71:1) தானத்தன தானாதன தானாதன தானா என வருவது 71-ஆம் பதிகம். இதன்கண் முதற்சீராகிய தானத்தன என்பது தனதத்தன, தந்தந்தன, தந்தத்தன, தனதன தன, தனந்தனதன', 'தனனாதன’, ‘தானாதன என வருதலும், இரண்டாஞ் சீராகவும், மூன்றாஞ் சீராகவும் வந்த தானாதன என்பது 'தனனாதன ஆதலும் நான்காஞ் சீராகிய தானா தனனா ஆதலும் பொருந்தும். யாப்பு - 2 கரையும் கடலும் மலையும் காலையு மாலையு மெல்லாம் (7.73:1). 6ð75ðfff 356ðf6ðffs ċRÉGTÉRÍT த த தானன தானன தானா