பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 235 எனக் காய்ச்சீர் நான்கு கொண்ட அடிகளாலாய தரவு கொச்சகக் கலிப்பாக்களாக அமைந்தது 51-ஆம் பதிகம். யாப்பு - 5 முத்தா முத்தி தரவல்ல முகிழ்மென் முலையாள் உமைபங்கா (7.52:1) தேமாதேமா புளிமாங்காய் புளிமா புளிமா புளிமாங்காய் என்றாங்கு 'மா, மா, காய், மா, மா, காய்' என்னும் அறுசீரடிகளால் இயன்றன. 52, 53ஆம் பதிகங்கள். இவ்விரு பதிகங்களும் நாலாந் திருமுறையில் 15-ஆம் எண்ணுள்ள 'பற்றற்றார் சோ (4.15) என்னும் பழம்பஞ்சுரப் பதிகத்தினை ஒத்துள்ளமை காணலாம். பழம் பஞ்சுரத்தான் ஏழு பதிகங்களும் கீழ்க் கூறிய வண்ணம் ஐந்து யாப்பு விகற்பங்கள் பெற்றன. மிகுந்த பழம் பஞ்சுரத்துக் கேலும் வகை இரண்டாக்கி' எனத் திருமுறை கண்டபுராணம் குறிப்பிடுதலை ஆழ்ந்து நோக்குங்கால் வாகீசர் அருந்தமிழில் பழம்பஞ்சுரப் பதிகம் பெற்ற கட்டளை ஒன்றோடு மேலும் இரண்டு கட்டளை பெறுவன சுந்தரர் அருளிய பழம் பஞ்சுரப் பதிகங்கள் என்பதும், எனவே அவை பெற்ற மொத்தக் கட்டளைகள் மூன்றென்பதும் நன்கு புலனாகும். கீழ்க்குறித்த ஐந்து யாப்பு விகற்பங்களுள் 1, 2, 3 ஆம் யாப்பு விகற்பங்கள் சீர் வகையால் வேறுபடினும் ஒசைஒப்புமைநோக்கி ஒரு கட்டளை யாகவும், 4-ஆம் யாப்பு விகற்பம் ஒரு கட்டளையாகவும், 5-ஆம் யாப்பு ஒரு கட்டளையாகவும் கொள்ளத் தக்கனவாகும். தக்கேசி இனி 54 முதல் 70 வரையுள்ள பதிகங்கள் தக்கேசிப் பண்ணுக்கு உரியன. அழுக்கு மெய்கொடுன் திருவடி யடைந்தேன் அதுவும் நாள்படப் பாலதொன் றானால் (7.54:1)