பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 மூவர் தேவாரம் - புதிய பார்வை கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித் (7.49:1) தனன தானன தனன தானன தனன தானா தானா என வரும் 49-ஆம் பதிகம். இதன்கண் பாடல்தோறும் நான்காமடி யின் நான்காஞ்சீரின் பின் எத்துக் கிருந்தீர்' என இரு சீர்கள் வந்து முடிய, அத் தொடரின்பின் எம்பிராணிரே என்ற தொடர் 'வைப்பு ஆக அமைந்துள்ளமை காணலாம். வைப்பாக வந்த “எம்பிரானிரே என்ற விளியையும் அதன்முன் வந்த எத்துக் கிருந்தீர்' என்ற வினாவையும் மீண்டும் ஒருமுறை இசைக்கு மிடத்து அத்திருப்பாடற் பொருளும் இசை நலமும் சிறந்து விளங்குதல் அறிந்து பாடி மகிழத் தக்கதாகும். யாப்பு - 3 சித்த நீரினை என்னொடு சூளறும் வைகலும் (7.50:1) தான தானன தானன தானன தானனா என்னும் கட்டளையடி பெற்றது 50-ஆம் திருப்பதிகம், முதற் சீராகிய தான 'தன்ன ஆதலும் தான தானன என்னும் முதலிரு சீர்களும் ஒன்றித் தானாதன என வருதலும், முதல் சீர் தன தான என நிற்க ஏனைச் சீர்கள் வேறுபடாமல் வருதலும் முதலிய விகற்பங்களை இப்பதிகத் திருப்பாடல்களில் காணலாம். யாப்பு - 4 பத்திமையும் அடிமையையும் கவிடுவோன் பாவியேன் (7.51:1) கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் தேமாங்காய்