பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 233 பழம்பஞ்சுரம் 47 முதல் 53 வரையுள்ள பதிகங்கள் பழம் பஞ்சுரம் என்ற பண்ணைச் சார்ந்தன. இவற்றில் யாப்பு விகற்பங்கள் ஐந்து உள்ளன. யாப்பு - 1 காட்டுர்க் கடலே கடம்பூர் மலையே காப் பேரூராம் (7.47:1) தேமா புளிமா புளிமா புளிமா தேமாதேமாங்காய் என அறுசீரடியால் முன்னுள்ள ஐந்து சீர்களும் மாச்சீர்களாகவும், ஆறாம் சீராகிய கடைச்சீர் மட்டும் காய்ச்சீராகவும் வருவது 47-ஆம் பதிகம். யாப்பு - 2 மற்று பற்றெனக் கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன் (7.48:1) தேமாகூவிளம் தேமாகூவிளம் தேமாகூவிளம் தேமாங்காய் என மாச்சீரும் விளச்சீரும் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து வந்து இறுதிச் சீர் பெரும்பாலும் காய்ச்சீராகவும் சிறுபான்மை விளச்சீராகவும் அமைய எழுசீரடியால் இயன்றது 48 -ஆம் பதிகம். தான தானன தான தானன தான தானன தானன என்பதனை இதன் கட்டளையாகக் கொள்ளலாம். இதன்கண் தான 'தனன. ஆதலும், தானன 'தானனா என வருதலும் அமையும். இவ்வாறு,