பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்த நிலையும் தொகுப்பு முறையும் 7 வந்தனர் அறையினைத் திறக்க ஏற்பாடுகளைச் செய்தருள்க' என்று அரசன் பணித்தான். அரசனது ஆணையால் அறை திறக்கப்பெற்றது. அவ்வறை யினுள் சென்று சோதித்தபொழுது தேவாரப் பதிகங்கள் எழுதப் பெற்றிருந்த ஏடுகள் கரையான் புற்றால் மூடப்பெற்றுச் சிதைந்த நிலையில் இருக்கக் கண்டார்கள் மிகவும் வருந்தினார்கள். நம்பியின் தொகுப்பு: புற்று மண்ணால் மூடப் பெற்றிருந்த அவ்வேடுகளின்மேல் எண்ணெயைச் சொரிந்து அவற்றைப் புறத்தே கொணர்ந்து எடுத்துப் பார்த்த அளவில் அவற்றுள் பெரும்பாலான ஏடுகள் பழுதுபட்டிருந்தன. மன்னன் அளவிலாத் துயர முற்றான். அந்நிலையில் "தேவாரப் பதிகங்களிலே இக் காலத்திற்கு வேண்டுவனவற்றை மாத்திரம் வைத்துவிட்டு மற்றவற்றைச் செல்லரிக்கச் செய்தோம்' என்றதொரு அருள் வாக்கு அங்குள்ளார் அனைவரும் கேட்கத் தோன்றியது. அதனை யுணர்ந்த மன்னன் ஆறுதல் அடைந்தான் ஒருவாறு மனம் தெளிந்து செல்லரிக்காதிருந்த திருப்பதிகங்களை மட்டிலும் சிதையாமல் எடுத்துத் தொகுத்துத் தருமாறு நம்பியாண்டார் நம்பியை வேண்டிக் கொண்டான். நம்பியும் மன்னனது விருப் பத்திற்கும் வேண்டுகோளுக்கும் ஒருவாறு இசைந்து செயலில் இறங்கினார். சம்பந்தப் பெருமான் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்களை முதல் மூன்று திருமுறைகளாகவும் அப்பர் சுவாமிகள் அருளிச் செய்தவற்றை நான்கு, ஐந்து, ஆறு என மூன்று திருமுறைகளாகவும், சுந்தர மூர்த்தி நாயனார் அருளிச் செய்த திருப்பதிகங்களை ஏழாந் திருமுறை என ஒன்றாகவும் வகுத்தருளினார். பண்முறை வகுப்பு: தேவாரத் திருப்பதிகங்களுக்குரிய பண் முறையினைத் தெரிந்து இசையமைக்க எண்ணினர் சோழ வேந்தனும் நம்பியாண்டார் நம்பியும் அவர்கள் திருத் தில்லைக்கு மேற்குத் திசையில் உள்ளதும் திருநீல கண்ட யாழ்ப்பாணர்