பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 மூவர் தேவாரம் - புதிய பார்வை நம்பியும் மன்னன் வேண்டு கோளில் அமைந்த அன்பின் திறத்தை உணர்ந்து, பொல்லாப் பிள்ளையாரை இறைஞ்சி நின்று. 'விநாயகப் பெருமானே, தேவாரத் திருமுறைகள் இருக்கும் இடத்தையும் திருத்தொண்டர்களுடைய வரலாறுகளையும் அடியேனுக்கு அருளிச் செய்தல் வேண்டும்' என வேண்டிக் கொண்டார். அவரது வேண்டுகோளுக்கிசைந்த பொல்லாப் பிள்ளையாரும், 'தில்லையில் கூத்தப் பெருமான் திருநடம் புரியும் பொன்னம்பலத்தின் அருகிலே தேவார ஆசிரியர்கள் மூவருடைய அழகிய கைகளின் அடையாளமுள்ள அறையி னுள்ளே தேவாரத்திருமுறைகள் வைத்துப் பூட்டப் பெற்றுள்ளன' என்று கூறித் திருத்தொண்டர்களின் வரலாறுகளையும் திருவாய் மலர்ந்தருளினார். பிள்ளையாரின் அருட் குறிப்பு: பிள்ளைப் பெருமானின் அருளானையைக் கேட்டு மகிழ்ந்த நம்பியாண்டார் நம்பியும் சோழ மன்னனும் தில்லைக்கு ஏகி கூத்தப் பெருமானை வணங்கி னார்கள். பின்னர் சோழமன்னன் தில்லைச் சிற்றம்பலத்திற்கு மேற்றிசையிலுள்ள அறையில் தேவாரத் திருமுறைகள் இருத் தலைத் தில்லைவாழ் அந்தணர்களிடம் தெரிவித்து அவ்வறை யைத் திறந்து காட்டுமாறு வேண்டினான். தேவார ஆசிரியர்கள் மூவருடைய கைகளின் இலச்சினையுடன் பூட்டப் பெற்றுள்ள அறையினை அம் மூவரும் வந்தாலன்றித் திறத்தல் இயலாது எனத் தில்லைவாழ் அந்தணர்கள் தெரிவித்தார்கள். பாம்பின்கால் பாம்பறியும்' என்பதற்கிணங்க நம்பியாண்டார் நம்பிகளின் யோசனைப்படி அரசன் தில்லைவாழ் அந்தணர் கட்குச் சிறப்புச் சன்மானம் வழங்கித் தில்லை அம்பலவாணர்க்குச் சிறப்புப் பூசனை வழிபாடுகள் செய்து தேவார ஆசிரியர் மூவருடைய திருமேனிகளுக்கு வழிபாடியற்றி, அத் திருவுருவங் களைத் திருவீதி வலம் வரச்செய்து அவர்களைத் திருப்பதிகங்கள் சேமித்து வைக்கப் பெற்றுள்ள அறையின் முன்னர்க் கொண்டு வந்து நிறுத்தி தில்லை வாழ் அந்தணர்களை நோக்கி 'மூவரும்