பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்த நிலையும் தொகுப்பு முறையும் 5 பொல்லாப் பிள்ளையார் நம்பி பொறு' என்று சொல்லித் தடுத்து நிவேதனப் பொருள் முழுவதையும் உட்கொண்டருளினார். அது கண்ட சிறுவன் மனம் மகிழ்ந்து ‘எம்பெருமானே, இன்று மிகவும் நேரம் கடந்த நிலையில் அடியேன் பள்ளிக்குச் சென்றால் ஆசிரியர் அடிப்பார். ஆதலால் எல்லா நூல்களையும் தேவரீரே அடியேனுக்கு ஒதுவித்தருளல் வேண்டும்' எனக் குறையிரந்து நின்றான். அவன் விரும்பிய வண்ணமே பிள்ளையாரும் அச் சிறுவனுக்கு எல்லா நூல்களையும் ஒதுவித்தருளினார். இங்ங்னம் பொல்லாப் பிள்ளையாரால் ஆட்கொள்ளப்பெற்றமையால் அச்சிறுவன் நம்பியாண்டார் நம்பி என வழங்கபெற்று 'திருவிரட்டை மணிமாலை' என்னும் தமிழ்ப் பிரபந்தம் பாடி தம்மை யாட்கொண்ட பொல்லாப் பிள்ளையாரைப் போற்றிப் பரவினான். மன்னன் செவிக்கு செய்தி எட்டுதல்: திருநாரையூரில் நடைபெற்ற இத்திருவருட் செய்தி தமிழ் நாடெங்கும் காட்டுத் தீயைப்போல் விரைவாகப் பரவியது. இச் செய்தி சோழ மன்னன் இராசராசனின் செவிக்கும் எட்டியது. அம் மன்னனும் தனது நிலைக்கேற்ப ஏராளமான பழ வகைகள், தேன், அவல், பொரி யுருண்டை, எள்ளுருண்டை, முதலிய படைப்புப் பொருள்கள் நிறையக் கொண்டு திருநாரையூரை யடைந்து நம்பியாண்டார் நம்பியைச் சேவித்து தம் குறையை விண்ணப்பித்தான். நம்பியும் அனைத்து நிவேதனப் பொருள்களையும் பிள்ளையார் திரு முன் வைத்த அளவில் அன்பால் படைக்கப் பெற்ற அவையனைத்தை யும் பிள்ளைப் பெருமான் திருவமுது செய்தருளினார். அது கண்ட மன்னன் மிக்க மனம் மகிழ்ந்து, நம்பியாண்டார் நம்பியை வணங்கி, ‘வேதியரே, சமய குரவர் மூவர் அருளிச் செய்த தேவாரத் திருமுறைகளும் திருத் தொண்டர்களும் பக்தர்கள் வாழும் இந்நிலவுலகத்தில் விளக்கம் பெறுதல் வேண்டும். பிள்ளைப் பெருமான் திருமுன் இவற்றை விண்ணப்பித்து ஆவன செய்தருளல் வேண்டும்' என்று வேண்டிக் கொண்டான்.