பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மூவர் தேவாரம் - புதிய பார்வை உண்டாயிற்று. எனினும் இனிய தேவாரத் திருப்பதிகங்களின் திருவருள் நலத்தில் திளைத்த வேந்தன் மூவர் முதலிகள் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் அனைத்தையும் தேடிக்கண்டு ஒரு சேரத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். எங்கும் தேடியும் அவை கிடைக்கவில்லை. அதனால் அம் மன்னனின் மனம் கவலையால் அல்லலுற்றது. நம்பியாண்டார் நம்பியின் அற்புதச் செயல்: எப்படியோ திருநாரையூரில் பொல்லாப்பிள்ளையாருக்குப் பூசனை புரிந்து வந்த நம்பியாண்டார் நம்பி புரிந்த அற்புதச் செயல் இவனுடைய செவிக்கு எட்டியது. அந்த அற்புதச் செயல் என்ன? பொல்லாப் பிள்ளையார்க்குப் பூசனை புரிந்து வந்த ஆதி சைவ குடும்பத்தில் சைவ சமயம் வாழ ஒரு நற்புதல்வர் பிறந்தருளார். அக் குழந்தை உரிய பருவத்தில் உப நயனம் செய்யப் பெற்று வேதம் முதலிய கலைகளை ஓதி வரும் நாளில் ஒரு நாள் தந்தை வேற்றுர்க்குச் செல்ல நேர்ந்தது. அன்று பொல்லாப் பிள்ளையார்க்குச் செய்ய வேண்டிய பூசனையைத் தம் புதல்வரைச் செய்யும்படி சொல்லி விட்டு அவர் வெளியூர்க்குச் சென்றார். தந்தையார் சொற்படி பிள்ளையார்க்குப் பூசனை செய்யச் சென்ற அந்தச் சிறுவன் பிள்ளையார்க்குத் திரு மஞ்சனம் முதலிய எல்லாவற்றையும் செய்து திருவமுதினைப் பிள்ளையார் திருமுன் வைத்து ‘எம்பெருமானே, திருவமுது செய்தருளல் வேண்டும் என வேண்டி நின்றார். விநாயகப் பெருமான் திருவமுது செய்ய வில்லை. நிவேதனம் என்பது தெய்வத்திற்குத் திருவமுது காட்டுதல்' என்னும் பொருளில் வழங்கும் சொல்லாகும். நிவேதிக்கும் பொருளை இறைவனே உட் கொள்வான் என்பது அச்சிறுவனின் எண்ணமாகும். அவ் வெண்ணத்தால் தூண்டப்பெற்ற அந்தச் சிறுவன் ‘அடியேன் ஏதேனும் தவறு செய்த துண்டோ? அடியேன் படைத்த திருவமுதினை உண்ணாதது ஏன்?' என்று சொல்லிக் கொண்டு தனது தலையைக் கல்லிலே மோதப் புக்கான். உடனே 2 தில்லைக்கு அருகில் சில கல தொலைவிலுள்ளது.