பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. மறைந்த நிலையும் தொகுப்பு முறையும் இன்று அருள் திரு மறைமலை அடிகளார் அறக்கட்டளைச் சொற்பொழிவுகளை நிகழ்த்த உங்கள் முன் வந்து நிற்கின்றேன். மறைமலை அடிகளை அறிமுகம் செய்வது கொல்லத் தெருவில் ஊசியை அறிமுகம் செய்வதோ டொக்கும். அவருடைய தமிழ்த் தொண்டும் சமயத் தொண்டும் உலகறிந்த செய்திகள். அவர்தம் தமிழுணர்வு ஈடும் எடுப்பும் அற்றது. பெற்றோர் இட்ட வேதாசலம்' என்ற பெயரை மறைமலை (வேதம் - மறை; அசலம் - மலை) என்று மாற்றிக் கொண்டதும் தாம் நடத்தி வந்த ஞான சாகரம்’ என்ற திங்கள் இதழின் பெயரை 'அறிவுக்கடல் (ஞானம் - அறிவு சாகரம் - கடல்) என்று மாற்றிக் கொண்டதும் இவற்றைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும். இத்துடன் இவை நிற்க, இராசராசசோழன். சொற்பொழிவு தலைப்புக்கு வருவோம். காவிரி பாயும் சோழ வளநாட்டில் இராசராச சோழன் (இவனே திருமுறை கண்டசோழன்) ஆண்டு வந்த காலம். அந்நாளில் அவனுடைய அவைக் களத்திலே எழுந்தருளி வரும் சிவனடி யார்கள் மூவர் பாடிய தேவாரப் பதிகங்களில் தமக்குத் தெரிந்த ஒவ்வொரு திருப்பதிகத்தையே ஒதக் கேட்டபோது பக்தி உணர்வு தலை துக்கியது, கைகள் இரண்டும் தலைமேற் குவிந்திட, கண்களில் நீர் தாரை தாரையாகச் சொரிய, மெய்மயிர் சிலிர்ப்ப, நெஞ்சம் நெக்குருக, இறைவனை வழிபடும் இன்பநிலை அவனுக்கு 1. இவருக்கு முன் இருந்த தமிழ்ப்பெரியார் சூரிய நாராயண சாஸ்திரியார்' என்பார் தம் பெயரை பரிதிமாற் கலைஞர் (சூரியன் - பரிதி நாராயணன் - மால், சாஸ்திரியார் - கலைஞர்) என்று மாற்றிக் கொண்டதை நினைவு கூர்கின்றோம்.