பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 249 "முறையால் வரு மதுரத்துடன் மொழிஇந்தள முதலில் குறையாநிலை மும்மைப்படி கூடுங்கிழமையினால் நிறைபாணியின் இசைகோள்புணர் நீடும்புகழ் வகையால் இறையான்மகிழ் இசைபாடினன் எல்லாம்நிகர் வல்லான்." எனவரும் பாடலில் சேக்கிழாரடிகள் தெளிவாகக் குறித்துள்ளமை கவனிக்கத் தக்கது. - 'பித்தாபிறைசூடி (7:1) என்ற பதிகத்தின் இசையமைதி யினை விளக்கும் இப்பாடல் அத்திருப்பதிகத்தின் இசைநிலையை விளக்கும் அதே யாப்பில் அமைந்திருத்தல் காணலாம். ஏழாம் திருமுறையின் முதலிலுள்ள இத்திருப்பதிகம் இந்தளம் பண்ணுக்கு உரியதென்றும், இந்தளப் பண் அமைய நம்பியாரூரர் பாடியருளின் திருப்பதிகங்கள் இரண்டு கட்டளைகள் பெறுவன என்றும், திருமுறை கண்ட புராணம் கூறும் குறிப்பு பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறும் குறிப்புகளுடன் ஒத்திருத்தல் காணலாம். இவ்வாறே தேவாரத் திருமுறைகளின் அமைப்புபற்றித் திருமுறை கண்ட புராணத்தில் கூறப்பெறும் செய்திகள் பலவும் சேக்கிழார், நம்பியாண்டார் நம்பி முதலிய முன்னையோர் கருத்துகளை அடி யொற்றி அமைந்தன என்பது திருமுறை நூல்களை ஒப்பு நோக்கிப் பயிலுங்கால் இனிது புலனாகும். இயற்றமிழில் வகுத்துரைக்கப்பெறும் யாப்பு விகற்பம் ஒன்றிலேயே இசைத் தமிழ் விகற்பங்கள் பல தோன்றுதல் கூடும். இந்நுட்பம் 39 பெரி.புரா. தடுத்தாட்.புரா.75