பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 மூவர் தேவாரம் - புதிய பார்வை அசையுஞ் சீரும் இசையொடு சேர்த்தி வகுத்தனர் உரைத்தலும் வல்லோர் ஆறே." என வரும் தொல்காப்பிய நூற்பாவால் உய்த்துணரப் பெறும். செய்யுட்களின் உறுப்புகளாகிய அசையினையும் சீரினையும் இசையமைதியோடு சேர்த்து நோக்கி, இசையமைப்புக்கு ஏற்ப அவ்விசையினையும் சீரினையும் பகுத்து உணர்த்துதலும் இயலிசைத் திறத்தில் வல்ல நல்லிசைப் புலவர் நெறியாகும் என்பது இவண் காட்டிய நூற்பாவின் பொருளாகும். ஒரு சீரின் முன்னும் பின்னும் உள்ள அசையினை விட்டிசைத்துத் தனியசையாக நிறுத்தியும், சீரின் ஈற்றசையினையினைப் பின்வரும் சீரின் முதலிலும் முதலசையினை முன்னுள்ள சீரின் ஈற்றிலும் பிரித்து இசைத்தும், இவ்வாறு எழுத்துப் பிரிந்திசைத்தலாகிய இசைமுறைபற்றி இயற்றமிழ் யாப்பு ஒன்றிலேயே இசைத் தொடர்புடைய வேறு சில யாப்பு விகற்பங்கள் தோன்றுதல் கூடும். இதற்கு இயற்றமிழ் யாப்பாகிய கட்டளைக் கலித்துறையினை எடுத்துக்காட்டாக்குதல் மிகவும் பொருந்தும். முதல் திருமுறையில் (1.116), (1.1.17) என்ற பதிகங்கள் 'வியாழக் குறிஞ்சி' என்ற பண்ணில் அமைந்தன. மூன்றாந் திருமுறையும் (3.56), (3.57) ஆம் பதிகங்கள் 'பஞ்சமம்’ என்னும் பண்ணுக்கு உரியன. நான்காம் திருமுறையில் (4.80) முதல் (4.100) வரையுள்ள பதிகங்கள் திருவிருத்தம் எனப் பெயர் பெற்றன. ஏழாம் திருமுறையில் (7.18) முதல் (7.28) வரையுள்ள பதிகங்களில் பல நட்டராகம் என்ற பண்ணிலும் (7.97) முதல் (7.100) வரையுள்ள பதிகங்கள் பஞ்சமம் என்ற பண்ணிலும் அமைந்துள்ளன. இவை யாவும் இயற்றமிழ் யாப்பின் படி கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களே. ஆயினும் இவற்றுள் திருவிருத்தப் பதிகங்கள் மட்டும் கட்டளைக் கலித்துறை என்ற முறையில் பாடப் பெறுகின்றன. ஏனைய பதிகங்கள் எழுத்துப் 40 தொல்,பொருள். செய்யுளி-11