பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்சுமந்த தேவாரப் பாடல்கள் 251 பிரிந்திசைக்கும் முறைபற்றி வெவ்வேறு யாப்பு விகற்பங்களாகப் பாடப் பெற்று வருவதனைத் தேவார ஒதுவார்கள் பலரும் நன்கு உணர்வார்கள். அசையும் சீரும் இசையொடு சேர்ந்து எழுத்துப் பிரிந்திசைத் தலாகிய இசை முறையினால் முதல் திருமுறையில் நட்டபாடைப் பண்ணில் அமைந்த யாப்பு விகற்பங்கள் நான்கும், இரண்டிரண்டு யாப்பு வகைகளாகப் பிரிந்து எட்டுக் கட்டளையாகிய திறத்தை யாழ் நூலாசிரியர் நன்கு விளக்கியுள்ளார். இனி, இயற்றமிழில் வேறு வேறாகிய யாப்பு விகற்பங்கள் சில ஒத்த ஓசைபற்றியும் சீர்நிலையினால் உளவாம் ஒத்த தாளங்களின் இயைபு பற்றியும் ஒரு கட்டளையாக அடக்கப் பெறுதலும் உண்டு. சம்பந்தப் பெருமான் அருளிய இரண்டாந் திருமுறையில் (2.54) முதல் (2.82) வரையுள்ள இந்தளப் பண்ணுக்குரிய பதிகங்களில் பத்து யாப்பு விகற்பங்கள் உள்ளன. தேவு வந்த இந்தளத்தின் செய்திக்கு நான்கு எனத் திருமுறை கண்டபுராணத்தில் இந்தளத்திற்கு நான்கு கட்டளைகளே கூறப் பெற்றன. இவண் கூறிய யாப்பு வகைகள் பத்தும் ஓசையொப்புமை பற்றியும் தாள இயைபு பற்றியும் நான்கு கட்டளைகளுள் அடங்கின. இனி, ஒரே யாப்பு விகற்பம் பல பண்களிலும் பயிலக் காண் கிறோம். காந்தாரப் பண்ணில் சம்பந்தப் பெருமான் அருளிய வேயுறுதோளி பங்கன் (2.85) என்ற பதிகத்தின் யாப்பு விகற்பம், நாவுக்கரசர் பெருமான் பாடியருளிய சிவனெனுமோசை (4.8) என்ற பியந்தைக் காந்தாரப் பண்ணிலும், 'பருவரை யொன்று சுற்றி (4.14) என்னும் பழம் பஞ்சுரப் பண்ணிலும் வருதல் காணலாம். இவ்வாறே முதல் திருமுறையில் உள்ள வடந்திகழ் மென்முலையாளை (1.43) என்ற தக்கராகப் பதிகத்தின் யாப்பு, இரண்டாம் திருமுறையில் மந்திரமாவது நீறு (2.66) முதலிய