பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 மூவர் தேவாரம் - புதிய பார்வை காந்தாரப் பதிகங்களில் அமைந்திருத்தலும், சீரணி திகழ் தரு' (1.41), விழையாருள்ளம் (142) என வரும் தக்கராகப் பதிகங்களின் யாப்பு விகற்பம் ஏழாம் திருமுறையில் வைத்தனன் றணக்கே (7.14) 'பூணாணாவதோர் (7.15) என வரும் தக்கராகப் பதிகங்களில் அமைந்திருத்தலும், மூன்றாம் திருமுறை யில் பஞ்சமப் பண்ணில் அமைந்த 'பைங்கோட்டு மலர்ப் புன்னை (3.63) என்ற பதிகத்தின் யாப்பமைதி நாவுக்கரசர் அருளிய கரவாடும் (4.1) என்னும் காந்தாரப் பண்ணில் காணப்படுதலும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கனவாகும். ஆகவே, இதுகாறும் எடுத்துக் காட்டிய குறிப்புகளால் தேவாரத் திருப்பதிகங்களில் சீர்நிலைபற்றியும், எழுத்தளவாகிய மாத்திரை பற்றியும், சீர்களில் முன்னும் பின்னும் உள்ள எழுத்துகள் அசை யாய் நின்று முன்பின்னுள்ள சீர்களின் ஈற்றிலும் முதலிலும் பிரிந்திணைந்து இசைத்தல்ால் உளவாம் இசைமுறை பற்றியும். அமைந்த ஒசைக் கூறுபாடுகளே திருமுறை கண்ட புராணம் கூறும் தேவாரப் பதிகங்களின் கட்டளைகளாம் என்பது நன்கு தெளியப்படும். தேவாரத் திருப்பதிகங்களாகிய ஏழு திருமுறை களிலும் பண்கள் தோறும் அமைந்த கட்டளைகளின் தொகையினை யும் அவற்றுக்குரிய யாப்பு விகற்பங்களின் தொகையினையும் உற்று நோக்கித் தெளிவு பெறுதல் இசைப் புலவர்களின் இன்றி யமையாத கடமையாகும்.