பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்த நிலையும் தொகுப்பு முறையும் 11 அகத்தாரையும் கொண்டு பண் தாளம் முதலியவற்றை வகுக்கச் செய்தார். மீண்டும் நாலாயிரம் உலகத்தில் பெரும் புகழுடன் திகழ்வதாயிற்று. நாதமுனிகளும் வேதவியாசர் திருமறைகளை நான்காக வகுத்ததுபோல நாலாயிரத்தையும் நான்காக வகுத்தார். முதல் மூன்று பகுதிகளையும் இசைப்பா தொகுதியிலும் நான்காவதை இயற்பா தொகுதியிலும் அடக்கினார். முதலாயிரத்தில் (முதல் பகுதி) திருப்பல்லாண்டு தொடங்கி கண்ணி நுண் சிறுத்தாம்பு' முடிய அடக்கினார். இதில் பெரியாழ்வார், ஆண்டாள். குலசேகராழ்வார் திருமழிசைபிரான், தொண்டரடிப் பொடிகள், திருப்பாணாழ்வார், மதுர கவிஞர்கள் ஆகியோர் அருளியவை அடங்கும். பெரிய திருமொழி (இரண்டாம் தொகுதி) யில் திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழி', 'திருக்குறுந் தாண்டகம்', 'திருநெடுந்தாண்டகம் ஆகிய மூன்றும் அடங்கும். நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழி'யை தனித் தொகுதியாக (மூன்றாம் பகுதி) அடைவுபடுத்தினார். இயற்பா என்ற நான் காவது தொகுதியில் பொய்கையாழ்வார், பூதத் தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் அருளிய பத்துத் திவ்வியப் பிரபந்தங்களையும் அடக்கினார். இராமாநுசர் காலத்தில் திருவரங்கத்தமுதனார் இயற்றிய இராமாநுச நூற்றந்தாதி’யும் இத்தொகுதியில் சேர்ந்தது. தேவாரப் பதிகங்கள் தொகுத்த வரிசை முறை: தேவாரத் திருப்பதிகங்களின் வரிசை முறை அவ்வாசிரியர்கள் பிறந்த குலம், வயது முதலிய உலகியல் முறைகளை ஒரு சிறிதும் கருதாமல், அப் பெருமக்கள் இவ்வுலக வாழ்வினைத் துறந்து இறைவன் திருவருளிற் கலந்து வீடுபேற்றடைவினை உளத்தில் கொண்டு அமைக்கப் பெற்றதாகும். திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருநல்லுர்ப் பெருமணத்தில் தம் திருமணத்திற்கு வந்த அடியார் திருக் கூட்டத்தோடு சிவபெருமானது ஈறில் பெருஞ்சோதியினில் புகுந்த வரலாற்றை