பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மூவர் தேவாரம் - புதிய பார்வை நாம் அறிவோம். அங்கு வந்தவர்கள் அனைவரும் ஒருவர் விடாமல் சிவப்பேறு அடைந்தனர் என்பது வரலாறு. பிள்ளை யாருக்கு நெருங்கிய நண்பரும் அப்பர் என்று தம்மால் வழங்கப் பெற்ற நாவுக்கரசர் பெருமானும் நெருங்கிய தொடர்புடைய நமிநந்திய அடிகளும் ஏன் வரவில்லை என்பது விளங்காப் புதிராகவே உள்ளது. வந்திருந்தால் அவர்களும் கயிலைப்பேறு பெற்றிருப்பர். திருமணத்திற்குச் சில ஆண்டுகள் கழிந்த பின்பே நாவுக்கரசர் பெருமான் திருப்புகலூரில் நண்ணரிய சிவானந்தவடிவே யாகி அண்ணலார் சேவடிக்கீழ் எய்தி இன்புற்றார் என்பதை நாம் அறிவோம். இக் கருத்து ஆசிரியர் சேக்கிழார் தம் பெரிய புராணத்துள் அடக்கியுள்ளார். திருநாவுக்கரசர் புராணத்தையும் திருஞானசம்பந்தர் புராணத்தையும் ஒருங்கு வைத்து ஆராய் வாருக்கு இனிது புலனாகும். திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் என்னும் இருவருள் முழுமுதற் பொருளாகிய சிவபெருமான் திருவருளை தேனினும் இனிய இன்னிசைச் செந்தமிழ்ப் பாடல் களால் முதன் முதல் போற்றியவர் திருஞானசம்பந்தப் பிள்ளையாரே யாவார். தேவாரத் திருமுறைகளுள் முதன்முதல் பாடப் பெற்ற பழைமையுடைய திருப்பதிகம் தோடுடைய செவியன் (11:1) எனத் தொடங்கும் காழிப் பிள்ளையாரின் தேவாரமே யாகும். சிவபெருமானை இன்னிசைத் தமிழால் முதலில் பாடிப் போற்றினமையாலும், அப் பெருமான் திருவடியில் முதலில் கலந்தமையாலும் திருஞானசம்பந்தப் பிள்ளையார் அருளிச் செய்த தேவாரத் திருப்பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாக வகுத்துறைக்கப் பெற்றன. திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருநல்லூர்ப் பெருமணத்தில் இறைவன் திருவடியில் கலந்து மறைந்த பின்னர்த் திருப்புகலூரில் திருநாவுக்கரசர் இறைவன் திருவடிகளில் கலந்து மறைந்தா ராதலின் அவர் பாடியருளிய திருப்பதிகங்கள் திருஞானசம்பந்தர்