பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்த நிலையும் தொகுப்பு முறையும் 13 தேவாரத் திருப்பதிகங்களை யடுத்து நான்கு, ஐந்து, ஆறாந் திருமுறைகளாக வரிசைப்படுத்தப் பெற்றன. இந்த இருவர்க்கும் காலத்தாற் பிற்பட்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிச் செய்த திருப்பதிகங்கள் அவ்விருவர் திருப் பதிகங்களையடுத்து ஏழாம் திருமுறையாக அமைக்கப்பெற்றன. பாடல்களின் தொகை: முதல்திருமுறையில் 136 பதிகங் களும் இரண்டாம் திருமுறையில் 122 பதிகங்களும் மூன்றாம் திருமுறையில் 125 பதிகங்களும் ஆக 383 பதிகங்கள் அடங்கி யவை சம்பந்தரின் தேவாரம். பதிகம் என்பது பத்துப் பாடல்கள் அடங்கிய பகுதி. பிற்காலத்தில் திருவிடைவாய் திருப்பதிகம் கல் வெட்டினின்றும் எடுக்கப் பெற்று மூன்றாம் திருமுறையின் இறுதியில் சேர்க்கப்பெற்றுள்ளது. தேவாரம் தொகுக்கப்பெற்ற காலத்தில் இது கிடைத்திருப்பின் இஃது இரண்டாம் திருமுறை யின் பண் இந்தளத்தில் சேர்க்கப் பெற்றிருக்கும். இவற்றுடன் இவர் பாடிய திருப்பாடல்கள் 4158ஆகத் தொகை பெறுகின்றன. நான்காம் திருமுறையில் 113 பதிகங்களும், ஐந்தாம் திருமுறையில் 100 பதிகங்களும், ஆறாம் திருமுறையில் 99 பதிகங்களும் அடங்கியவை நாவுக்கரசரின் தேவாரம். இவற் றுடன் இவர் பாடிய திருப்பாடல்கள் 3066ஆகத் தொகை பெறு கின்றன. ஏழாம் திருமுறையில் 100 பதிகங்கள் உள்ளன. இவற்றி லுள்ள பாடல்கள் 1026ஆகத் தொகை பெறுகின்றன. ஆகவே, சம்பந்தர் திருமுறை பதிகம் பாடல்கள் 1. 136 1469 2 122 1331 3. 125+1 1358 384 4 158