பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மூவர் தேவாரம் - புதிய பார்வை நாவுக்கரசர் 4 1 13 1070 5 1 OO 1 O15 6 99 981 312. 3066 சுந்தரமூர்த்தி 7 1 OO 1O26 மேலும், சம்பந்தர் 1–3 384 4.158 நாவுக்கரசர் 4-6 312 3ᎤᏮᏮ சுந்தரமூர்த்தி 7 1 OO 1 O26 코 796. 3250. திருமுறை என்னும் இப்பெயர் மூவர் திருப்பதிகங்கட்கு மட்டுமே வழங்கியதாகும். நம்பியாண்டார் நம்பியின் காலத் திற்குப் பின்புதான் திருவாசகம் முதலிய ஏனைய நூல்கட்கும் வழங்கப் பெற்றது என்பது திருமுறை கண்ட வரலாற்றால் நன்கு பெறப்படும். தேவாரம் என்னும் பெயர் வழக்கு: மூவர் திருப் பதிகங்களை தேவாரம் என வழங்கும் வழக்கம் இரட்டையர்கள் பாடிய ஏகாம்பரநாதர் உலாவில்தான் முதன் முதலாகக் காணப்பெறுகின்றது. 'மூவாத பேரன்பின் மூவர் முதலிகளும் தேவாரஞ் செய்த திருப்பாட்டும். என்பது அவ்வுலாவிலுள்ள தொடராகும். இத் தொடரில் தேவாரஞ் செய்த திருப்பாட்டு என்றவிடத்து 'தேவாரம்' எனப் பெயர் நிலையில் வைத்துரையாமல் தேவாரம் செய்த' என வினை நிலையில் வைத்துரைத்தலால் திருப்பாட்டு என்பது மூவர் செய்த திருப்பாடல்களையும் தேவாரம் செய்த' என்பது அத் திருப்பாடல்களை இசைப்படுத்திப் பாடிய தொழில் நிலையையும் குறித்து நின்றன எனக் கொள்ள வேண்டியுள்ளது.