பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்த நிலையும் தொகுப்பு முறையும் 15 மூவர் திருப்பதிகங்களையும் 'தேவாரம்' என்ற பெயரால் முதன் முதல் தெளிவாகக் குறிப்பிட்டு வழங்கியவர் சைவ எல்லப்ப நாவலர் ஆவர். இவர் தாம் பாடிய திருவருணைக் கலம்பகத்தில் (திருவண்ணா மலைக்குரிய கலம்பகம்) சைவ சமய குரவர் நால்வரையும் போற்றியது. சைவத்தின் மேற்சமயம்வே றிலையதில் சார்சிவமாம் தெய்வத்தின் மேல்தெய்வம் இல்லெனும் நான்மறைச் செம்பொருள்வாய் மைவத்த சீர்திருத் தேவார மும்திரு வாசகமும் உய்வைத் தரஞ்செய்த நால்வர் பொற்றாள் உயிர்த்துணையே." என்பது காப்புச் செய்யுள். இதில் “வாய்மை வைத்த சீர்திருத் தேவார மும்திரு வாசகமும், உய்வைத் தரஞ்செய்த நால்வர் பொற்றாள் உயிர்த் துணையே’ என்ற அடிகளில் (3, 4வது அடி) மூவர் திருப்பதிகங்களும் என்ற பெயரால் குறிக்கப் பெற்றிருத்தல் காணலாம். இரட்டையர்க்குக் காலத்தாற் பிற்பட்டவர் எல்லப்ப நாவலர். முன்னவர் குறிப்பிட்ட 'திருப்பாட்டும் பின்னவர் குறிப்பிட்ட தேவாரமும் ஒன்றே என்பது பின்னவர் கூற்றால் இனிது தெளிவாகும். இரட்டையர் அடைகொடுத்த சிறப்பு: இதன் காரணத்தை ஒரு சிறிது நோக்குவோம். தேவாரம் என்ற தொடருக்கு அறிஞர் பலரும் வேறு வேறாகப் பொருள் கொண்டனர். இதனைத் தேவ + ஆரம் எனப் பிரித்து இறைவனுக்கு மாலையாயது எனப் 5 இப்பாடலே அவருடைய பெயருடன் 'சைவ' என்ற அடைமொழி சேர்ந்ததற்குக் காரணமாகக் கருதலாம்.