பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்த நிலையும் தொகுப்பு முறையும் 19 தொன்னெறி வியற்கை தோரிய மகளிரும் சீரியல் பொலிய நீரல் நீங்க வாரம் இரண்டும் வரிசையிற் பாட' எனவரும் அடிகட்கு 'ஆடி முதிர்ந்தாராகிய மகளிர் நன்மை யுண்டாகவும் தீமை நீங்கவும் வேண்டித் தெய்வப் பாடல் பாட' என அரும்பத ஆசிரியரும், அடியார்க்கு நல்லாரும் பொருள் கூறியுள்ளனர். எனவே இவ்வடிகளில் வரும் வாரம் என்ற சொல் தெய்வப் பாடல் என்ற பொருளில் இளங்கோ வடிகளால் ஆளப் பெற்றது என்பது நன்கு பெறப்படும். அன்றியும் சிலப்பதிகாரத் தில் கடலாடு காதையில்' திருமாலைப்பாடும் தேவபாணியும் இறைவனைப் போற்றும் தேவபாணியும் வருண பூதர் நால்வரை யும் பரவும் நால்வகைத் தேவபாணியும் ஞாயிறு திங்கள் என்னும் தெய்வத்தைப் பரவிய தேவபாணியும் கூத்தின்கண் பாடுதற் குரிய இசைப் பாடல்களாகக் கொள்ளப் பெற்றன என இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். பாணி என்பது பண்ணொடு கூடிய இசைப்பாட்டு. தெய்வத்தைப் பண் பொருந்தப் போற்றிப் பாடிய இசைப்பாடல் தேவபாணி எனப் பெயர் பெறுவதாயிற்று. “தேவபாணி முதலாக அரங்கொழி செய்யுள் ஈறாகவுள்ள செந்துறை விகற்பங்கள் எல்லாம் புறநாடகங்களுக்குரிய உருவாவன' என அடியார்க்கு நல்லார் கூறுவர். தேவபாணி: தெய்வத்தை முன்னிலையில் வைத்துப் பரவிய பாடலே தேவபாணி என வழங்கும் சிறப்புடையதாகும். இதனை, ஏனை யொன்றே தேவர் பராஅய முன்னிலைக் கண்ணே.' 10. சிலம்பு, அரங்கேற்று காதை - அடி 135 - 137 11. சிலம்பு - கடலாடு காதை - அடி 35 12. தொல்.பொருள். செய்யுள் - சூத்திரம் - 133