பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மூவர் தேவாரம் - புதிய பார்வை இயற்கை வனப்பும் தெய்வ வனப்புமாகிய இருவகை வனப்புகளே இசைப்பாடலுக்குரிய சிறப்புடைப் பொருள்க ளெனப் பண்டைத் தமிழாசிரியர் கருதினர். இக் கருத்தினாலேயே இசைப்பாடல்கள் யாவும் முதற்பொருளும் கருப்பொருளுமாகிய உலகியற் பொருள்களின் இயற்கை யழகினையும் அவற்றின் உடனாய் விளங்கும் தெய்வ அழகினையும் பொருளாகக் கொண்டு பாடப் பெறுவனவாயின. இசையில் வல்ல பாணர் முதலிய கலைச் செல்வர் தம் இசைத்திறத்தை அவையின்கண் புலப்படுத்தும் பொழுதெல்லாம் இசைப் பாடலுக்குச் சிறப்புடைய பொருளாய் விளங்கும் முழுமுதற்பொருளைப் போற்றும் தெய்வப் பாடலையே முதன்மையாகப் பாடும் வழக்கம் ஆயிற்று. பண்டை நாளில் வாழ்ந்த பாணர் முதலியோர் இம் முறையினைத் தொன்று தொட்டு வரும் இசை மரபாகக் கொண்டு போற்றுதலைத் தமது முதற் கடமையாகக் கடைப்பிடித்து வந்துள்ளனர். இச் செய்தியினைப் பத்துப் பாட்டுள் ஒன்றாகிய மலைபடுகடாத்துள், மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ் நரம்புமீதிறவாதுடன்புணர்ந் தொன்றிக் கடவதறிந்த இன்குரல் விரலியர் தொன்றொழுகு மரபிற்றம்மியல்வு வழாஅது அருந்திறல் கடவுள் பழிச்சிய பின்றை விருந்திற் பாணி கழிப்பி" எனவரும் அடிகளில் பெருங்குன்றுார்ப் பெருங் கெளசிகனார் தெளிவாக விளக்கியுள்ளமை கண்டு மகிழலாம். 'வாரம் பாடுதல் என்பது இசைப்பாடலால் கடவுளைப் போற்றி வழிபடுதல் என்ற பொருளில் கடைச் சங்க காலத்தே வழங்கி வந்ததாகத் தெரியக் கிடக்கின்றது. சிலப்பதிகார அரங்கேற்று காதையில், 9. மலைபடுகடாம் - அடி 534 - 39