பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்த நிலையும் தொகுப்பு முறையும் 17 கல்வெட்டுச் சான்றோ கிடைக்கவில்லை. சோழர் மன்னர் ஆட்சிக் காலத்தில் வழிபாடு' என்னும் பொருளில் வழங்கப் பெறுவதற் குரிய காரணம் யாதென ஆராய்வது இன்றியமையாதது. ஆராய்ச்சி: தே' என்பது தெய்வம் என்னும் பொருளைக் குறித்து வழங்கும் ஒரெழுத்தொரு மொழி. 'வாரம் என்பது இசையின் கூறுபாட்டினைக் குறித்து வழங்கும் தமிழ்ச் சொல். வாரமாவது முதல் நடை, வாரம், கூடை, திரள் என்னும் இசை இயக்கம் நான்கனுள் ஒன்று மந்த நடையுடையதாய்த் தாழ்ந்து செல்லும் இன்னிசை இயக்கம் முதல் நடை எனப்படும். முடுகிச் செல்லும் விரைந்த நடையினையுடைய இசையியக்கம் திரள் எனப்படும். இவ்விரண்டிற்கும் இடை நிகர்த்ததாய்ச் சொல் லொழுக்கமும் இசையொழுக்கமும் பொருந்திய பாடல் வாரம் எனப்படும். சொற்செறிவும் இசைச் செறிவும் உடைய பாடல் கூடை எனப்படும். இவ்விசை இயக்கம் நான்கின் இயல் பினையும் சிலப்பதிகார உரையில் அரும்பத உரையாசிரியரும் அடியார்க்கு நல்லாரும் நன்கு விளக்கியுள்ளனர். இழுமென ஒழுகிய சொல்நடையும் செம்பாகமாகப் பொருணர்த்தும் பொருள் தெளிவும் வாய்க்கப் பெற்ற செய்யுளே வாரம் என்னும் இசை யியக்கம் வாய்ந்த பாடலாகும் என்பது அடியார்க்கு நல்லார் முதலிய உரையாசிரியர்களின் கருத்தாகும். இசைப்பாட்டுடன் இசைக் கூறுபாடுகளை இசைத்துப் பாடவல்ல இசைப் புலவனை 'வல்லோன் எனவும், அவனால், இப்பாடலுடன் புணர்க்கப் பெறும் இசைக் கூறுபாட்டினை வாரம் எனவும் இயலிசைத் திறத்தில் வன்மையில்லாதவனாற் புணர்க்கப் பெறும் வார இசை சிதைந்தொழியும் இயல்பிற்றெனவும் வல்லோன் புணரா வாரம் போன்றே" என வரும் உவமையால் ஆசிரியர் தொல்காப்பிய னார் விளங்க யுணர்ச்சியுள்ளார். 8. தொல்,பொருள் - மரபு - 109.