பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 23 சீகாழியில் அவதரித்தவர். தந்தையார் கெளண்டின்ய கோத்திரம் என வழங்கப்படுகின்ற கெளனிய கோத்திரத்தைச் சார்ந்த சிவபாத இருதயர்; அந்தண சீலர் தாயார் பகவதி. பதினாறு வயதுவரை வாழ்ந்து சிவப்பேறு அடைந்தவர். இவர் பாடிய திருப்பதிகங்கள் 383. 1918-இல் விடைவாய் (திருவிடை வாசல்) என்ற இடத்தில் அரசு கல்வெட்டுத் துறையினரால் கண்டறியப் பெற்ற பதிகம் ஒன்று: "மறியார் கரத்தெந்தை' என்ற முதற்குறிப்புடையது. A.R. No 8 of 1918 என்று பதிவு செய்யப்பெற்றுள்ளது. மூன்றாந் திருமுறை இறுதியில் தனியாகக் காணப் பெற்றுள்ளது. இதனையும் சேர்த்து காழிப்பிள்ளையார் அருளியவை 384 திருப்பதிகள் ஆகும். இவற்றுள் அற்புதத் திருப்பதிகங்களை மட்டிலும் சில விவரங்களுடன் ஈண்டுக் காட்டுவேன். அற்புதத் திருப்பதிகங்கள் என்பவை தெய்வ அருளால் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கொண்டவை யாகும். 1. ஞானப்பால் உண்டது: காழிப்பிள்ளையாரை சைவ அன்பர்கள் முருகப்பிரானின் அவதாரமாகக் கருதினார்கள். ஓராண்டு நிரம்புவதற்கு முன்னரே தாதியர்களின் கைகளைப் பற்றி நமது தளர்ச்சி நீங்கிப் பாதம் நிலத்திற் பொருந்த நடந்து விளையாடினார். இரண்டாம் ஆண்டு நிரம்பிய நிலையில் சிறு தேர் உருட்டுதல், சிறுமியர் செய்த மணல்வீடுகளை அழித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். மூன்றாம் ஆண்டுப் பருவத்தில் முன்னைப் பிறப்புணர்வு முகிழ்க்கத் தொடங்கியது. இந்நிலையில் அக்குழந்தை தன் தந்தையாருடன் திருக்கோயிலுக்குச் செல்ல 1. சிய்யாழி' எனவும் வழங்குவர். சீர்காழி என்று எழுதுவது தவறு. விழுப்புரம் மயிலாடுதுறை இருப்பூர்தி பாதையில் சிய்யாழி' என்ற நிலை யத்திலிருந்து ஒரு கல் தொலைவு பாடல்பெற்ற தலங்களுள் மிகுதியான பதிகத் தொகை (71) இத்தலத்திற்கு உண்டு. இத்தலம் கழுமலம், காழி, கொச்சைவயம், சண்பை, சிரபுரம், தோணிபுரம், பிரமபுரம், புகலி, புறவம், பூந்தராய், வெங்குரு. வேணுபுரம் என்ற 12 திருப்பெயர்களை உடையது (பெ.பு.திருஞான.14). சம்பந்தர் மட்டிலும் 67 பதிகங்கள் அருளியுள்ளார்.