பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 25 சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை அறிமாற்றும் பாங்கினில்ஒங் கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம்.உணர்ந்தார் அந்நிலையில்’ என்று காட்டுவர். இந்நிலையில் நீராடி நியமங்களை முடித்த சிவபாத இருதயர் தடாகக் கரைக்கு வருகின்றார். சிவஞானத்தின் திருவுருவாகக் கரையில் நின்று கொண்டிருக்கும் பிள்ளையாரின் செவ்வா யிதழின் இருமருங்கும் பால் வழிந்து கொண்டிருப்பதைக் காண் கின்றார். அவரை நோக்கி, 'பிள்ளாய்! யார் அளித்த பால்டிசிலை நீ உண்டனை? எச்சில் கலக்கும்படி உனக்கு இட்டாரைக் காட்டுக' என வெகுண்டு அருகிற் கிடந்த கோலொன்றை எடுத்து அடிப் பதற்கு ஓங்குகின்றார். பிள்ளையார் தம் உச்சிமேல் குவித்த கைவிரளொன்றினால் தோணி புரத்து இறைவனைச் சுட்டிக் காட்டி, தம் உள்ளத்தே பொழிந்தெழுந்த உயர்ஞானத் திருமொழியால், தோடுடைய செவியன்விடையேறியோர் துவெண் மதிசூடி காடுடைய சுடலைப்பொடி பூசியென் 92_6nT6m faj&$6}]ft &;;8rf6u6 rjt ஏடுடைய மலரான்முனை நாட்பணிந் தேத்தவருள் செய்த பீடுடைய பிரமாபுர மேவிய பெருமான் இவனன்றே (1) என்ற திருப்பாடலை முதலாகவுடைய பதிகத்தைப் பாடி எம்மை இது செய்த பிரான் பிரமாபுர மேவிய பெம்மான் இவனே எனத் தம் தந்தையாருக்கு அடையாளங்களுடன், சுட்டிக் குறிப்பிடுகின்றார். 3. பெரி.புரா. திருஞா. சம்ப, புரா 70 4. சம்பந்தேவா (1.1)