பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மூவர் தேவாரம் - புதிய பார்வை மண்ணுலக மக்கள் அறியாமையால் பிழை செய்தாலும் பின் தம் தவற்றை வுணர்ந்து இறைவனை உளமுருகிப் போற்றி வழிபடுவாராயின், இறைவனது திருவருள் அவர்களை உய்விக்கும் என்ற உண்மையை அறிவுறுத்தக் கருதிய சண்பை வேந்தர், இறைவன் வீற்றிருக்கும் திருக்கயிலாயத்தை ஆராயாது எடுக்க முயன்ற இராவணன் அம்மலையின்கீழ் அகப்பட்டு வருந்தித் தன் தவறுணர்ந்து இன்னிசைப் பாடலால் இறைவனைப் போற்ற, இறைவனும் அவனுக்கு அருள் புரிந்த பெருங்கருணைத் திறத் தினை எட்டாம் பாடலில் எடுத்துரைக்கின்றார். இறைவனை அன்பினால் வழிபடும் அடியார்களுக்கே இறைவனது திருவருள் எளிதிற்கிடைக்கும் என்னும் நல்லுணர்வுடன் அப் பெருமானைத் தொழாமல் தாங்களே முதல்வர் என் வழுவான மனத்தினால் மயக்கமுற்ற திருமாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாகி இறைவனுடைய அடியும் முடியும் தேடி அயர்வுற்றுப் பின்பு திருவைந்தெழுத்தினை ஓதி உய்ந்த செய்தி யினை ஒன்பதாவது திருப்பாடலில் எடுத்துரைக்கின்றார். கலை ஞானங்கட் கெல்லாம் முதல்வராகிய கயிலை நாதனின் திருவருள் நெறியினை அறிந்து உய்யும் மெய்யுணர்வின்றித் தம்மில் தன்மையைத் தேடிக் கொள்ள முயலும் சமண சாக்கியர் இவர்தம் சமய நெறிகள் பழி விளைக்கும் குற்றமுடையனவே என்பதனைப் பத்தாம் திருப்பாடலில் எடுத்துக் காட்டுகின்றார். பத்துப் பாடல்களால் பதிகத்தை நிறைவு செய்து பதிகப் பயன் கூறும் பதினொன்றாம் பாடலாகிய திருக்கடைக்காப்பினை யும் பாடி தம் திரு நாமத்தையும் அதில் பதித்துத் தம் கண் எதிரே விசும்பின்கண் விடைமீது தோன்றியருளிய அம்மையப்பரைத் தொழுது நிற்கின்றார்." 5. வைணவர்கள் (ஆழ்வார் பெருமக்கள்) பாடியவற்றைப் பல சுருதிப் பாசுரம் என்று வழங்குவர். 6. இங்ங்ணம் சம்பந்தர் பதிகங்களில் எட்டாம் பாடலில் இராவணன் செய்தியும், ஒன்பதாம் பாடலில் திருமால் - நான்முகன்பற்றிய செய்தியும் பத்தாம் பாடலில் சமணர் சாக்கியர் செய்தியும் திருக்கடைக் காப்பில் தம் பெயரும் விடாமல் மரபாக வருவதைக் காணலாம்.