பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 27 பிறவிப் பெருங்கடலைக் கடந்திடும்படி தம் திருவடிப் புணையினைச் சம்பந்தப்பெருமானுக்குத் தந்தருள வந்த சிவபெருமான் உமாதேவியாருடன் திருத்தோணிபுரத் திருக் கோயிலை நோக்கி எழுந்தருள்கின்றார். காழி ஞானச் சிவக் கன்றும் தம் கண்வழி சென்ற கருத்து விடாது தொடர்ந்து செல்லத் தாமும் திருத்தோணிபுரக் கோயிலை நண்ணுகின்றார். தவம் பல செய்து இவருக்குத் தாதை எனும் பெருமை பெற்ற சிவபாத இருதயரும் பிள்ளையாரை அடித்தற்கெடுத்த சிறு கோலும் தம் கையினின்றும் நெகிழ்ந்து கீழே விழ வெருட்சியும் வியப்பும் உடையவராகின்றார். தம் இரு கைகளையும் தலை மேற்கூப்பித் தொழுது தம் அருமருந்தன்ன மகன் பாடியருளிய அகப்பொருள் துறை வாய்ந்த செந்தமிழ்ப் பாடல்களின் குறிப்பின்ன உணர் கின்றார். தம் மகன் கண்ட இறைவனது திருவுருவக்காட்சியினைத் தாம் முற்றிலும் காணப் பெற்றிலராயினும் தம் திருமகனுக்கு உண் டான சிவஞானப் பெருக்கின் விளைவுகளை நேரில் காண்கின் றார். இதனைத் தோணி புரத்து ஈசனின் திருவருள் என்றே துணிந்து தம் மகனைத் தொடர்ந்து தாமும் திருக்கோயிலுக்கு ஏகுகின்றார். (2) பொற்றாளம் பெறுதல்: உமையம்மையார் அளித்த பாலடிசில் உண்டு பாலறாவாயராகிய பிள்ளையார் மறுநாள் திருக்கழுமலக் கோயிலை அடைந்து அம்மையப்பரை வணங்கி அருகேயுள்ள கோலக்கா என்னும் திருப்பதியிலுள்ள பெருமானை வணங்கும் விருப்புடன் வருகின்றார். வந்தவர் 'மடையில் வாளை (1.23) என்ற இன்னிசைத் திருப்பதிகத்தைப் பாடிப் போற்று கின்றார். இதில், - வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் கடிகொள் கொன்றைக் கலந்த சென்னியன் கொடிகொள் விழவார் கோலக் காவுளெம் அடிகொள் பாதம் அடைந்து வாழ்மினே (6) 7. கோலக்கா (திருத்தாளமுடையார் கோயில்) சீகாழிக்கு மேற்கே ஒன்றரைக் கல் தொலைவிலுள்ளது. சம்பந்தர் கையினால் தாளம் போட்டுப் பாடும்போது இத்தலத்து எம்பெருமான் ஐந்தெழுத்து வரையப்பெற்ற பொற்றாளங்கள் இரண்டை அவருக்குத் தந்தான் அம்பிகை தாளங்கட்கு ۴- ۲۹ ۹ مهم و اسر مه، ۴ اث سا - - - - ۔ --:ہ --- یثہ ۔ ۔ ۔ یعہ ہ، " ، ، جب ہم xہم 6A