பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 29 'நெல்வாயில் அரத்துறை" நோக்கி வருகின்றார். இதற்குமுன் எல்லாம் வழிநடை இளைப்பு நீங்க ஒவ்வொரு சமயம் தம் தந்தையார் தோளின்மேல் அமர்ந்து செல்லும் பழக்க முடைய பிள்ளையார் திருவரத்துறையை நோக்கிச் செல்லும்போது அப் பழக்கத்தை விடுத்து நடந்து செல்கின்றார். மலரினும் மெல்லிய திருவடிகள் தரையிற்பட்டு வருந்த விரைந்து நடக்கின்றார். இதுகண்டு தந்தையாரும் பரிவுறுகின்றார். பிள்ளையார் திருவைந் தெழுத்தினை ஒதிக் கொண்டு மாறன்படி என்ற ஊரினை அடை வதற்கு முன்னர் கதிரவனும் மேற்றிசையில் மறைகின்றான். அன்றிரவு பிள்ளையாரும் அடியார்களும் மாறன்பாடியில் தங்குகின்றனர். பிள்ளையாரது வழிநடைவருத்தத்தைத் திருவுளங்கொண்ட அரத்துறை ஈசன் நெல்வாயிலிலுள்ள மறையேர்ரின் கனவில் தோன்றி ஞானசம்பந்தன் நம்மை நோக்கி வருகின்றான். அவனுக்கென முத்துச்சிவிகை, குடை, சின்னம் ஆகியவற்றை நம்பாற் பெற்றுக்கொண்டு அவனையடைந்து கொடுப்பீர்களாக' என்று அருள் செய்து மறைந்தருள்கின்றார். அஃதுணர்ந்த மறை யவர் அனைவரும் வியப்புற்று விழித் தெழுகின்றனர். தாம் கனவில் கண்ட் காட்சியை ஒருவருக்கொருவர் கூறி மகிழ்கின் றனர். அருணோதயத்தில் அரத்துறைக் கோயிலைத் திறந்து பார்க்கும்போது முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னம் என்பவை இருத்தலைக் கண்டு மகிழ்கின்றனர். அவற்றை எடுத்துக் கொண்டு மங்கல ஒலி முழங்க காழிப் பிள்ளையாரை எதிர் கொண்டு அழைக்கச் செல்லுகின்றனர்." அரத்துறை இறைவன் பிள்ளையார் கனவிலும் தோன்றி, 'நாம் அரத்துறை வாழும் வள்ளல். மகிழ்ந்தளிப்பவற்றை நீ ஏற்றுக் கொள்ளலாம்' என்று கூறி மறைகின்றார். சண்பை 10, நெல்வாயில் அரத்துறை: பெண்ணாகடம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 4 கல் தொலைவு. நிவா என்ற வெள்ளாற்றங்கரையிலுள்ளது. சம்பந்தருக்கு முத்துச் சிவிகை, குடை, சின்னங்கள் சிவபெருமானால் தரப் பெற்ற அற்புதத் தலம். - 11. பெரி.புரா.ஞானசம். புராணம்.