பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O மூவர் தேவாரம் - புதிய பார்வை வேந்தரும் திருவைந்தெழுத்து ஓதி காலைக் கடன்களை முடித்துக் கொண்டு இறைவன் திருவருளைச் சிந்தித்த வண்ணம் அமர்ந்திருக்கின்றார். இந்நிலையில் அரத்துறை மறையவர்கள் காழிப்பிள்ளையார் தங்கியிருக்கும் இடம் ஏகி, 'அந்தமில்சீர் அரத்துறை ஆதியார் தந்த பேரருள் தாங்குவீர்” எனப் பணிந்து தமக்கு இறைவன் உணர்த்திய அனைத்தையும் எடுத்துரைத்துத் தாம் கொணர்ந்த பொருள்களை பிள்ளையாரிடம் சமர்ப்பிக்கின்றனர். ஆளுடைய பிள்ளையார் இறைவனது பேரருளை நினைந்து “எந்தையீசன்" என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ்ச் சொல் மாலையால் அரத்துறை ஈசனை ஏத்துகின்றார். இதன் முதற் பாடல், எந்தை யீசன்எம் பெருமான் ஏறமர் கடவுள்என்று ஏத்திச் சிந்தை செய்பவர்க்கு அல்லால் சென்றுகை கூடுவதன்றால் கந்த மாமலர் உந்திக் கரும்புனல் நிவாமல்கு கரைமேல் அந்தணர் சோலைநெல் வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே (1) என்பது. ஒவ்வொரு பாடலும் 'அரத்துறை அடிகள் தம் அருளே’ என்று இறுவது கண்டு இன்புறத் தக்கது. பின்னர் பிள்ளையார் திருவைந்தெழுத்து ஓதி முத்துச் சிவிகையில் ஏறி அமர்கின்றார்; குடை நிழற்றத் திருச்சின்னம் ஊத அரத்துறை ஆலயத்தை அடை கின்றார். இந்த இடத்தில் சேக்கிழாரின் வருணனை' படித்து இன் புறத்தக்கது. காட்சிகளை மனத் திரையில் அமைத்து மகிழத்தக் கது. சில நாட்கள் அரத்துறையில் தங்கி விடுகின்றார் காழிவேந்தர். (4) முயலகன் நோய் தீர்த்தல்: திருஞானசம்பந்தர் வரலாற்றைக் கேள்வியுற்ற திருநாவுக்கரசு சுவாமிகள் அவரைக் காண்பதற்கு சீகாழிக்கு வந்தார். சுவாமிகளும் அவரை எதிர் கொண்டழைத்து உபசரித்து இருவருமாகக் கோயிலை வணங்கிச் சில நாட்கள் இன்புற்றிருந்தனர். பின்னர் தலங்களைச் சேவிக்கப் 12. சம்பந் தேவா. 290 13. பெ.பு.ஞானசம்.புராணம் - 216-294