பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-4 திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 31 பிரிந்தனர். சம்பந்தப் பெருமான் சிவனடியார் புடை சூழப் பல பதிகளைச் சேவித்து திருப்பாச்சி லாச்சிராமத்தை" அடைகின்றனர். ஆங்குள்ள கொல்லி மழவன் என்ற குறுநில மன்னன் தன் மகள் முயலகன் என்னும் நோயினால் வருந்துவதைக் கண்டு பலவகை மருத்துவ முறைகளைக் கையாண்டும் அந்நோய் தணியாமை யால் இறைவன் திருவடியே உறுதுணையெனக் கொண்டு தன் மகளைத் திருபாச்சிலாச்சிராமத்து இறைவன் திரு முன்னர் இட்டு வைத்தனன், இந்நிலையில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் ஆங்கு எழுந்தருள்கின்றார் என்ற செய்தியைக் கேள்வியுற்று அவ்விடத்தை விட்டு நீங்கிய பிள்ளையாரைப் போற்றும் பெரு விருப்புடன் தன் நகர் முழுவதையும் அலங்கரித்து எதிர் கொண்டு இறைஞ்சினான். பிள்ளையார் சிவிகையினின்றும் இறங்கித் திருக்கோயில் வழிபடச் செல்லும்பொழுது இளங்கொடிபோல் வாளாகிய கன்னியொருத்தி உணர்வற்று நிலத்திற் கிடத்தலைக் கண்டு இஃது என்ன?’ என வினவினார். அது கேட்ட மழவன் பிள்ளையாரை வணங்கி நின்று, 'இவள் அடியேன் பெற்ற மகள்' இவளை முயலகன் என்னும் நோய் வருத்துதலால் இறைவன் திரு முன்னர் இட்டு வைத்தேன்' என்றான். அருள் கூர்ந்த சிந்தையாராகிய ஆளுடைய பிள்ளையார் பாச்சிலாச்சிராமத்துப் பரமன்ைப் பணிந்து, துணிவளர் திங்கள் துளங்கி விளங்கச் சுடர்ச்சடை சுற்றிமு டித்துப் பணிவளர் கொள்கையர் வாரி டஞ்சூழ ஆரிட மும்பலி நேர்வர் அணிவளர் கோளமெல் லாஞ்செய் துபாச்சில் ஆச்சிரா மத்துறை கின்றசில் மணிவலர் கண்டரோ மங்கையை வாட மயல்செய்வ தோஇவர் மாண்பே. ' 15. சம்பந். தேவா (1.44:1) 14. திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி): திருச்சிமாவட்டம் பிட்சாண்டார் கோயில் 2 1/2 கல் தொலைவு. கொல்லிமழவன் புதல்வியின் முயலகன் நோயைச் சம்பந்தர் தீர்த்த அற்புதத்தலம். இத்தலத்து நடராசர் ஊன்றிய திருவடியின்கீழ் முயலகன் இல்லை.