பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மூவர் தேவாரம் - புதிய பார்வை என்ற திருப்பதிகத்தைப் பாடி, திருநீலகண்டமுடைய அருளாள னாகிய பெருமான் தன்னை வழிபடும் இளநங்கையாகிய இவளை நோய் மெலிய வைத்தல் மாண்ப்ாமோ? என வினவிப் போற்றி னார்; இந்நிலையில் உணர்விழந்து தரைமிசைக் கிடந்த மழவன் மகள் நோய் நீங்கி உணர்வுற்றெழுந்து தன் தந்தையின் பக்கத்தில் வந்து நின்றாள். அது கண்ட கொல்லி மழவன் அளவிலா மகிழ்ச்சி யடைந்து தன் அருமை மகளுடன் ஆளுடைய பிள்ளையார் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். பிள்ளையாரும் பிணி தீர்த்தருளிய இறைவன் திருவடிகளை ஒன்றிய சிந்தையுடன் பணிந்து போற்றினார். இவ்வாறு ஆளுடைய பிள்ளையார் கொல்லி மழவன் மகளது முயலகன் என்ற பொருட்பிணியைத் தீர்த்தருளிய அருட்செயலை, மழவன் சிறுமதலை வான்பெருநோய் தீர்த்த குழகன் குலமறையோர் கோமான் என்ற அடிகளால் நம்பியாண்டார் நம்பி உளமுருகிப் போற்றி யுள்ளார். (5) பணிநோய் தீர்த்தல்: பிள்ளையர் கொங்குநாட்டு வழிபாட்டின்போது கொடிமாடச் செங்குன்றுார்" வருகின்றார். அப்பொழுது பனிக்காலமாதலால் அந்நாட்டின் இயல்பின்படி 16. கொடிமாடச்செங்குன்றுர் (திருச்செங்கோடு) சேலம் - ஈரோடு இருப்பூர்தி வழியில் சங்கரி - துர்க்கம் என்ற நிலையத்திலிருந்து 6 கல் தொலைவு. பேருந்து வசதியுண்டு (நாமக்கல்லிலிருந்தும் போகலாம்). மலைமேல் கோயில் உள்ளது. அர்த்த நாரீசுவரர் மூலத்தானத் திருவுருவம் சலவைக் கல்லாலாகியது. மிக அழகியது. சம்பந்தர் முன்பனிக் காலத்தில் இங்கெழுந்தருளியபோது உடன் வந்த தொண்டர் குழாம் குளிர்காய்ச்சலால் வருந்தினபோது திருநீலகண்டப் பதிகம் (சம்பந்.தேவா.1.116) பாடி அதனைப் போக்குவித்தனர். (1958 மே மாதம் காரைக்குடி கம்பன் அடிப்பொடி சா. கணேசனுடன் அடியேன் இத்தல வழிபாடு செய்தேன்) சம்பந்தர் பதிகம் மட்டிலும் பெற்றதலம். -