பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பதிகங்கள் : (1) திருஞானசம்பந்தர் 33 தோன்றுவதாகிய பனி என்னும் சுரநோய் ஆளுடைய பிள்ளையாருடன் வந்த அடியார்களைத் தொடர்ந்து வருத்தியது. இதையுணர்ந்த சண்டை வேந்தர் இந்நிலத்தின் இயல்பெனினும் இறைவன் அடியார்களாகிய நமக்கு எய்தப்பெற்றது' என்று கூறி இறைவனைப் போற்றுகின்றார். உலகினை அழிக்க வந்த நஞ்சைத் தன்னகத்தடக்கி இடர்நீக்கியது இறைவனது திருநீல கண்டம் ஆதலால் 'எவ்விடத்தும் அடியார்களைப் பற்றிய இடர்களை தீர்த்தருள்வது எம்பிரான் திருநீலகண்டம்' என்று அதன்மீது ஆணை வைத்து "அவ்வினைக் கிவ்வினை" என்ற பதிகம்பாடி பரமனைப் போற்றுகின்றார். மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப் பிரப்பில் பெருமான் திருந்தடிக்கீழ்ப் பிழையா வண்ணம் பறித்த மலர்க்கொடு வந்துமை ஏத்தும் பணியடியோம் சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீல கண்டம் (6) என்பது இதன் ஆறாவது பாடல். இப் பதிகத்தில் ஏழாவது பாடல் காணப் பெறவில்லை. - (6) முத்துப் பந்தர் பெறுதல்: கொங்கு நாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு சோழ நாட்டிற்கு வருகின்றார் சண்பை வேந்தர். திருவலஞ்சுழி, பழையாறை முதலிய தலங்களை சேவித்துக் கொண்டு பட்டீசரத்திற்கு" வருகின்றார். சரியான முதுவேனில் காலம் வந்த நேரம் நண்பகல். நிழல் தருவதற்கு 17. சம்பந்.தேவா.1.116 18. பட்டீசரம்: தாராசுரம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 2 கல்தொலைவு சம்பந்தருக்கு முத்துப்பந்தர் கொடுத்தருளிய தலம். அமர்நீதி நாயனார் வாழ்ந்த தலம். அப்பர் பாடல் மட்டிலும் பெற்ற தலம்.