பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மூவர் தேவாரம் - புதிய பார்வை ஆகாயத்தில் சிவபூதங்கள் முத்துப்பந்தர் ஒன்று தாங்கின. பிள்ளையாரின் முடி முத்துப் பக்தரைப் பிடித்து 'எம்மை விடுத்து அருள் புரிந்தார் பட்டிசர்' என்று கூறின. அவ்வானொலியும் முத்துப்பந்தரும் ஆகாயத்தில் தோன்றக் கண்ட ஆளுடைய பிள்ளையார் இறைவன் திருவருள் இதுவானால் ஏற்றுக் கெர்ள்ளத் தகுவதே எனக் கருதி நிலமிசைப் பணிந்தார். வானத்தி லிருந்து இறங்கும் முத்துப்பந்தரினை அடியார்கள் கைக் கொண்டு விரித்துப் பிடித்தார்கள் ஞான சம்பந்தரும் அவ்வழகிய பந்தரின் நிழலை ஈசன் இணையடி நிழல்' எனக் கருதி இனிதமர்ந்து அடியார்கள் புடைசூழ திருப்பட்டிசரத் திருக்கோயிலை யடைந்து தமக்கு இனிய நிழல் தந்துதவிய இறைவனை வணங்கித் திருப்பதிகம் பாடிப் பரவி இன்புற்றார். முதுவேனில் வெப்பம் நீங்க முத்துப்பந்தர் அளித்தருளிய இறைவனைப் பிள்ளையார் போற்றிப் பரவிய திருப்பதிகம் பாடல்மறை சூடல்மதி பல்வளையொர் பாகமதில் முன்றொர் கணையால் கூடவெளி யூட்டிஎழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழசையுள் மாடமழபாடியுறை பட்டீச்சரம் மேயகடி கட்டரவினார் வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டிவினை வீடு மவரே (3:73:1) என்ற பாடலை முதலாகக் கொண்டதாகும். 'பாடும் பாடல் மறையாகவும், திருமுடியிற் சூடுங்கண்ணி வெண்பிறையாகவும், உமையம்மையார் தமது ஒருபாகத்தின் கண்ணே திகழவும், திரியும் இயல்பினவாகிய மும்மதில்களையும் ஒரம்பினால் தீயுண்ணச் செய்து (எம்பொருட்டு முத்துப் பந்தரினை) எழில் பெறக்காட்டி (அதனால் வெயில் வெப்பம் தணியும்படி) நிழலைக் கூட்டியருளிய பொழில் சூழ்ந்த பழையாறையின் ஒரு பகுதியாகிய மழபாடிக் கூற்றிலுள்ள பட்டிச்சரத்தில் வீற்றிருக்கும்