பக்கம்:மூவர் தேவாரம்-புதிய பார்வை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மூவர் தேவாரம் - புதிய பார்வை என நாலடிமேல் வைப்பாகிய திருப்பதிகத்தினைப் பாடிப் போற்றினார். இவ்வாறு ஒதினவுடன் ஒரு சிவபூதம் தோன்றி அகன் பீடத்துச்சி வைத்தது பசும் பொன் ஆயிரம் கிழியொன்றை, வைத்தபின்பு 'இப் பொற்கிழி எடுக்க எடுக்கக் குறையாத உலவாக்கிழி, இறைவனருளால் உமக்கு அளிக்கப் பெற்றதாகும்" எனக் கூறி மறைந்தது. ஆவடு துறையீசன் அருளிய உலவாக்கிழியினைத் தந்தையார் கையில் தந்து 'நல்வேள்வி தீதுநீங்க நீர் செய்யும்' என்று இயம்பினார். மேலும், 'பண்டை மறைமுறைப்படி செய்தற் குரிய நல்ல வேள்விகளை நீவிர் செய்தற்கு மட்டுமின்றித் திருக்கழுமலத்திலுள்ள வேதியர் அனைவரும் செய்வதற்கும் வேண்டும் பொன்களை மேன்மேலும் தந்து வளர்வது இவ்வுலவாக்கிழி' என்று கூறினார். தந்தையாரும் மகன்பால் விடைபெற்றுச் சீகாழிப் பதியை அடைந்தனர். ஆவடுதுறைப் பெருமான் பிள்ளையார்க்கு ஆயிரம் பொன் நிறைந்த பொற்கிழியினைத் தந்தருளிய அற்புத நிகழ்ச்சியினை அவர்தம் கெழுதகை நண்பராகிய நாவுக்கரசர் பெருமானும், மாயிரு ஞாலமெல்லாம் மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கையானைப் படர்சடை வைப்பர் போலும் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமலவுரர்க்கு அம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறைய னாரே." என வரும் திரு நேரிசையில் புகழ்ந்து போற்றியுள்ளார். நம்பி யாண்டார் நம்பியும் இவ்வற்புதத்தைத் தமது பிரபந்தங்களில் குறித்துப் போற்றியிருத்தல் இங்கு நோக்கத் தக்கதாகும். 20. அப்பர் தேவா 4.56:1